மூட நம்பிக்கை கள் அதிகம் கொண்ட கேரள மாநிலத்தை இந்தியாவின் பைத்தியக்கார விடுதி என்று சுவாமி விவேகானந்தர் வர்ணித்தார்.
ஸ்ரீ வித்வாரி வைத்யநாத கோவிலில் மகா காளி யக்னம் நடக்க இருக்கிறது.
அதில் நடக்க இருக்கும் நெருப்பு யாகத்தில் பயன் படுத்த பக்தர்களிடம் ஊசி மூலம் எடுக்கும் ரத்த மாதிரிகளை கோவில் நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.
அந்த ரத்த மாதிரிகளை சேர்த்து காளிக்கு அபிஷேகம் செய்வார்களாம். அதன் மூலம் பல நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாம்.
நோய் பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்கும்போது இதற்கும் எடுத்தால் என்ன என்று கேள்வி வேறு கேட்கிறார்கள் நிர்வாகிகள்.
இரண்டும் ஒன்றா? மனித ரத்தம் பூஜைக்கு பயன்படுத்தலாம் என்றால் பின்னர் அது நரபலிக்கு வித்திடாதா?
அந்த காட்டுமிராண்டி தனத்திற்கு பெயர் பிரார்த்தனையா?
எதை ஒழிக்க இத்தனை ஆண்டுகள் போராடினோமோ அதை தக்க வைக்க இன்னனும் அலைகிறார்களே?
கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதை தடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
போதாது. தண்டனை நடவடிக்கை வேண்டும்.
இந்த ரத்தம் வேதங்களில் சொல்லியபடி யாகத்தில் தெளிக்கப் படுமாம். ஆக வேதம் என்பதே நரபலியை ஊக்குவிக்கிறதாகத்தான் பொருள் படுகிறது.
இடதுசாரிகள் ஆளும் மாநிலத்திலேயே இத்தகைய மத வெறியர்கள் மூடநம்பிக்கையை வளர்க்க முற்படுகிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்?