” சவுக்கிதார் மோடி ‘” அதாவது காவல்காரர் மோடி என்று தன்னைத்தானே நாட்டின் காவலாளி என்று அழைத்துக் கொண்டார் பிரதமர் மோடி.
உடனே அடுத்த கட்ட தலைவர்கள் அனைவரும் அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ் உட்பட தங்களை சவுக்கிதார் என்று பெயருக்கு முன்னே போட்டுக் கொண்டு விளம்பரப் படுத்திக் கொண்டனர்.
ஆனால் சுப்பிரமணியசாமி பாஜக வின் உயர் மட்டக் குழுவில் இருந்தாலும் மோடியையும் அமைச்சரவை சகாக்களையும் நேரம் வரும்போது எல்லாம் தாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அவருக்கு பதவி கொடுக்காமல் அதே நேரத்தில் வெளியிலும் விட்டு விடாமல் பாஜக சலுகை கொடுத்து வருகிறது.
பார்ப்பனர் என்பதால் சு. சாமிக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை அது. வேறு யாரும் சு. சாமி போல் பேசிவிட்டு பாஜக வில் நீடிக்க முடியுமா?
தான் தன்னை சவுக்கிதார் என்று அழைத்துக் கொள்ள விரும்பாத சு. சாமி அதற்கு சொன்ன விளக்கம் தான் அவரது சனாதன திமிரை காட்டுகிறது.
இவர் பார்ப்பனராம். இவர் மற்றவர்களுக்கு காவலாளியாக இருக்க மாட்டாராம். மாறாக மற்றவர்கள் தான் இவருக்கு காவல் வேலை செய்ய வேண்டுமாம். இதைவிட சனாதன திமிரை வெளிக்காட்ட முடியுமா?
அருன்ஜெட்லிக்கும் பிரதமர் மோடிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று சொல்கிறாரே? இவரை ஏன் பாஜக கட்சியில் வைத்திருக்கிறது?
தமிழ்நாட்டுக்கு வந்து ஏழு பேரை விடுவிக்க முடியாது என்கிறார். பாஜக வின் தேர்தல் அறிக்கையை குப்பையில் போட வேண்டும் என்கிறார். பார்ப்பனீயம் அதிகாரத்தில் இருந்தால் எப்படிஎல்லாம் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் என்பதற்கு சு. சாமி சிறந்த உதாரணம்.
This website uses cookies.