முதலில் சாதாரண பெரும்பன்மையிலும் இறுதியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் தீர்மானம் நிறைவேற்றபட்டால் ஐ நா வில் ஒரு மொழி அதிகாரபூர்வ மொழியாகும். இப்போது ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ், ரஷியன், சைனீஸ் அரபு மொழிகள் அதிகாரபூர்வ மொழிகள்.. முக்கியமான விடயம் அந்தந்த நாடுகளில் அவைகள் மட்டுமே அதிகாரபூர்வ மொழிகள்.
அதாவது உலக மக்கள் தொகையில் பாதிபேர் பேசும் மொழிகள்தான் ஐ நா வின் அதிகாரபூர்வ மொழிகள். .
இந்தியாவில் அரசியல் சட்டம் பிரிவு 343 ன் படி இந்தி மட்டுமே அதிகாரபூர்வ மொழி. . ஆங்கிலம் நீடிக்கலாம் என்ற நேருவின் உறுதிமொழி எழுதப் படாத சட்டமாக அமுலில் உள்ளது.
வேடிக்கை என்னவென்றால் 348 பிரிவின்படி ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் சட்டமொழி. உச்சநீதிமன்றதிலும் உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடித்து வருகிறது. இதை மாற்ற முடியுமா? மாநில மொழிகளில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வர ஆரம்பித்தால் உச்சநீதி மன்றம் திணறிப் போகும்.
எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இருந்தாலும் அனைத்தும் மத்திய அளவில் அலுவல் மொழிகளாக இல்லை. இந்த நிலையில்தான் சுஷ்மா சுவராஜ் 129 நாடுகளின் ஆதரவைப் பெற்று 270 கோடி செலவு செய்து பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் அதன் பிறகு இந்தியை அதிகாரவ பூர்வ மொழியாக அங்கீகரிப் பதற்கும் தீவிர முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த முயற்சியைத்தான் கருணாநிதி கண்டித்துள்ளார்.
1. இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்துவிடும் ஆபத்து இதில் இருக்கிறது.
2. இந்தியே இந்தியாவின் அடையாளம் என்று சித்தரிப்பது வேண்டாத வேலை.
3. மத்திய அரசின் உதவியோடு இம்மாதம் 10, 12 தேதிகளில்
போபாலில் உலக இந்தி மாநாடு நடக்க இருக்கிறது.
4. மற்ற மொழி பேசுபவர்கள் இரண்டாம் தர குடிமகள் ஆக்கப் படுவார்கள்.
முதலில் இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதையை கொடுங்கள். யார் வேண்டுமானாலும் தங்கள் தாய்மொழியில் பாராளுமன்றத்தில் பேசலாம் என்ற நிலை வர வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்பு ஏற்பாடுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா நிலைப்படும். அதற்கப்புறம் இந்தியை உலகளாவிய அளவில் கொண்டு செல்லலாம். , ஏனைய இந்திய மொழிகளோடு.