புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியின் அராஜகம் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் மூன்று பா ஜ க பிரமுகர்களை சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமித்தார்.
அவர்களின் தகுதி பற்றி கேள்வி எழுப்பிய மாற்றுக் கட்சியினர் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.
சட்ட மன்றம் நடந்து கொண்டிருந்தபோது அவர்களை அனுமதிக்க சபாநாயகர் மறுத்தார்.
அவரது நடவடிக்கை சரியா சரி இல்லையா என்பது வேறு . ஆனால் அவர்களை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே சட்ட மன்றம் ஒத்தி வைக்கப் பட்டது.
யார் செய்யும் அரசியல் சரி என்பது இருக்கட்டும்.
பிரச்னை உச்ச நீதி மன்றம் சென்றது. அங்கு உச்ச நீதி மன்றம் ஏன் அவர்களை அனுமதிக்க கூடாது என்று கேள்வி கேட்டு விட்டு அவர்களை அனுமதிக்கலாம் என்று ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டு விட்டு விசாரணைக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
ஆக பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்டது. உச்ச நீதி மன்றத்தின் கருத்தை சபாநாயகர் மதிக்க கடமைப் பட்டிருக்கிறாரா என்பது அடுத்து வர இருக்கும் விசாரணையில் உச்ச நீதி மன்றமே தீர்மானிக்கும்.
விசாரணை முடியும் வரை உச்சநீதி மன்றம் தெரிவிக்கும் கருத்து எந்த அளவு கட்டுப் படுத்தும் என்பதையும் உச்ச நீதி மன்றமே தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நிலையில் துணை நிலை ஆளுநர் பேடி நிதி மசோதாவுக்கு தர வேண்டிய ஒப்புதலை தராமல் இழுத்தடித்தார். அதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலையை தோற்றுவித்திருக்கிறார் .
பிரச்சினை பெரிதானவுடன் உடனே ஒரு ஒப்புதலை கொடுத்து விட்டு அதனோடு ஒரு நிபந்தனையும் விதித்திருக்கிறார். அதாவது நியமன உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை தான் அது.
இது அராஜகம் இல்லையா? உச்ச நீதிமன்ற கருத்தை தன் நிபந்தனை உத்தரவுக்கு ஆதாரமாக குறிப்பிட்ட கிரண் பேடி அது தன் வேலை இல்லை என்பதை ஏன் உணரவில்லை?.
உச்ச நீதி மன்ற உத்தரவை அமல் படுத்த மறுத்தால் , அது குற்றம் என்றால் , உச்ச நீதி மன்றம் நடவடிக்கை எடுத்து விட்டு போகட்டுமே?
இவரே நிபந்தனை விதிப்பது எந்த வகையில் நியாயம்?
இதை உச்ச நீதி மன்றம் அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் இன்றைய நீதியா என்பதையும் உச்ச நீதி மன்றம் விளக்கினால் நல்லது.
This website uses cookies.