புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காவல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்ட பின் பா ஜ க வில் சேர்ந்து டெல்லியில் தேர்தலில் தோற்று பா ஜ க ஆட்சிக்கு வந்தபின் இங்கே வந்தவர்.
அவருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் நடக்கும் முட்டல் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி புதுச்சேரியை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற பிரதேசமாக அறிவிக்க ஒரு கூட்டம். உள்ளாட்சி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடாக இருந்தாலும் அங்கே விளம்பரத்தில் துணை நிலை ஆளுநர் படம் மட்டுமே இருந்தது. உள்ளூர் அமைச்சர் அதி மு க அன்பழகன் பெயர் இல்லை.
இருந்தாலும் அவர் ஆஜராகி பிரச்னை எழுப்ப அமைச்சர் நமசிவாயம் சமாதானப் படுத்தி பேச அழைக்க அன்பழகன் தனது தொகுதி குறைகளை பட்டியல் இட்டு பேச ஆரம்பித்தார்.
துணை ஆளுநர் துண்டு சீட்டில் பேச்சை முடிக்க எழுதி அனுப்ப அன்பழகன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் துணை நிலை ஆளுநர் எழுந்து பேசிகொண்டிருந்த அன்பழகனிடம் சென்று பேச்சை நிறுத்த சொல்ல அவர் மறுக்க அவர் நீ வெளியே போ என்று சொல்ல இவரும் திருப்பி நீ வெளியே போ என்று சொல்ல இருவரும் நடந்து கொண்ட விதம் அருவருப்பாக இருந்தது.
ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருந்தபோது கிரண்பேடி இடை மறித்திருக்கக் கூடாது.
நேரமில்லை என்றால் தனது பேச்சை குறைத்திருக்கலாம். அல்லது வெளியேறிக் கூட இருக்கலாம். அதைவிட்டு விட்டு பொதுமக்கள் முன்னிலையில் தரக் குறைவாக நடந்து கொண்டிருக்கக் கூடாது.
கடைசியில் கிரண் பேடி விழாவில் பேசாமல் போனதுதான் மிச்சம். பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் துணை நிலை ஆளுநர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாமா?!
மேலும் ரசாபாசம் ஆகாமல் அத்துடன் விட்டார்களே என்று பொதுமக்கள் கலைந்து போனார்கள்.
This website uses cookies.