பசவன்னர் பனிரெண்டாம் நூற்றாண்டில் உருவாக்கிய லிங்காயத்து தர்மம் சனாதன தர்மத்தில் இருந்து வேறுபட்டது.
அன்பை வளர்க்கவும் வெறுப்பை தவிர்க்கவும் உபதேசித்த பசவர் பிராமணிய , ஜைன, பூர்விக வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டு புதிய வழிபாட்டு முறையை உருவாக்கினார்.
சைவம் உணவுமுறை; அவர்களே சமுதாய சடங்குகளை செய்து கொள்வது; இறந்தவர்களை அடக்கம் செய்வது என்று தனித்த கொள்கைகள் ஏறத்தாழ வள்ளலாரின் கொள்கைகளை ஒத்தது. குமரி மாவட்ட வைகுண்டரும் இதே பணியைத்தான் தொடங்கினார்.
இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி வழிபாட்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் பார்ப்பனிய சனாதன தர்மத்தில் இருந்து வேறுபட்டவை.
எங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலகாலம் பல அரசுகள் தவிர்த்து வந்த நிலையில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா திடீர் என்று லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்து , இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில், அறிவித்திருக்கிறார்.
இனிமேல் இவர்கள் இந்துக்கள் அல்ல. மதம் என்ற பிரிவில் லிங்காயத்துக்கள் என்றே குறிப்பிட முடியும். சிறுபான்மை தகுதியும் வந்து விடும். அதன் மூலம் அரசின் சிறப்பு சலுகைகள் கிடைக்கவும் வழி இருக்கிறது.
லிங்காயத்துக்களின் மற்றும் ஒரு பிரிவான வீர சைவர்கள் பத்து சதம் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு வேதங்களை ஏற்று வேத சடங்குகளை செய்கிறார்கள்.
அவர்கள் ரேனுகாச்சாரியாரைபின்பற்றுபவர்களாம். பார்ப்பனர்கள் தான் எந்த அமைப்பையும் பிரித்து விடுவார்களே?
எடியூரப்பாவை முதல்வராக வர விடாமல் செய்வதற்காக செய்யப் பட்ட அறிவிப்பு என்றாலும் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது.
சனாதன பார்ப்பன தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத பல மதங்களை ஒன்றிணைத்து இந்து என்று அழைப்பதன் மூலம் எல்லாருமே பார்ப்பன மதத்தை சேர்ந்தவர்கள் என்ற பொருள் நிலைத்து விட்டது. இது மகாத் தவறு.
இந்து என்ற மதமே இல்லை என்கிற போது ஏன் அந்தப் பெயரில் அழைக்க வேண்டும்?
சைவர்களும் வைணவர்களும் கூட இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வது தேவையில்லை. எல்லாரையும் சேர்த்துக் கொள்வதால் பெரும்பான்மை நாம் என்ற உணர்வு கிடைக்கிறது என்பதற்காகவே இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதை பெருமையாக கருதுவது பேதைமை.
இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதால் பார்ப்பநீயம்தான் வெல்கிறது.
This website uses cookies.