இந்திய அரசியல்

லவ் ஜிஹாத்! மதம் மாறி ஹாதியா செய்த திருமணம் செல்லும்: உச்ச நீதி மன்றம்!

Share

தன் மகள் அகிலாவை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி விட்டார்கள்.   அவளை ஐ எஸ் இயக்கத்துக்கு பாலியல் சேவை செய்ய சிரியா அழைத்து போக திட்டமிட்டு வேலை செய்து விட்டு நீதி மன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஒருவனை தயார் செய்து திருமணம் செய்து விட்டார்கள் . எனவே திருமணத்தை செல்லாது  என்று அறிவிக்க கோரி அகிலாவின் தந்தை அசோகன் வழக்கு தொடுக்கிறார்.

தேசிய புலனாய்வு நிறுவனம் இதில் விசாரணை செய்து அறிக்கை அளித்தது. அதில் அகிலாவை தற்போது ஏமன் நாட்டில் இருக்கும் இஸ்லாத்தின் சலாபி பிரிவை சேர்ந்த ஷிரின் சஹானா , மற்றும் பாசல் முஸ்தாபா இருவரும் மதம் மாற்றி ஹாதியா என பெயர் சூட்டினார்கள். ஹாதியவும் ஏமன் நாட்டிற்கு இஸ்லாத்தை பற்றி மேல் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார் என சொல்லி இருந்தது.

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா -ஷபின் ஜகான் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து ஜகான் சார்ந்த சமூக ஜனநாயக இந்திய கட்சி தனது ஆதரவோடு உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்தது.

உச்சநீதி மன்றம் ஹாதியாவை அழைத்து விசாரித்து அவர் தான் விரும்பித்தான் மதம் மாறியதாகவும் கணவருடன் வாழவே விருப்பம் என்று சொல்லவும் உச்சநீதி மன்றம் இருவரது திருமணத்தையும் செல்லும் என்றும் வயது வந்த இரு குடிமக்கள் தங்களது துணியை தேடிக் கொள்ளும் உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி தீர்ப்பு அளித்ததுடன் தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணை தொடரலாம் எனவும் கூறியிருக்கிறது.

ஓமியோபதி படிக்கும் ஹாதியா  மதங்கள் பற்றி ஆராய்ந்தவர் அல்ல. ஆனால் தான் காதலித்தவர் சார்ந்த மதத்தை தழுவ அவர் தயாராக இருந்திருக்கிறார்.

தந்தை தாயை புறக்கணித்து காதல் பெரிதென செல்லும் உரிமை வயது வந்த யாருக்கும் உண்டு.

ஆனால் அதை திட்டமிட்டு நிறுவன ரீதியில் நடத்துகிறார்களா என்பது தான் விசாரணைக்கு உரியதாக இருக்கிறது.

தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை நடத்தி வரும் சைனாபா என்ற பெண்மணிதான் ஹாதியாவை கட்டாயப் படுத்தி மதம் மாற்றியவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

இது இடைக்கால ஆணைதான். இறுதி ஆணை வர வேண்டும்.

ஹாதியாவின் தந்தை இது ஒரு தந்திரமான திருமணம்.    உண்மையானதல்ல என்று உறுதியாக நம்புகிறார். காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் இந்த வழக்கை மூத்த வழக்கறிஞர் களை கொண்டு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கிறார்.

உண்மையான காதல் திருமணங்களை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.    ஆனால் அசோகன் ஏன் உண்மையான காதலை எதிர்க்க வேண்டும்.?    மதம் மாறுவது மட்டும்தான் அவருக்கு பிரச்னையா?   தன் பெற்றோர் தனது காதலையும் காதலனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஹாதியா  கூறுகிறார்.

படிப்பை முடித்தவுடன் கேரளாவிலேயே வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 பாதி படிப்பில் காதலில் விழுந்து மதம் மாறி பெற்றோரை மனம்  வருத்தி போராடும் ஹாதியாவை வாழ்த்துவதா நிந்திப்பதா? 

உண்மை வெளிவர வேண்டும்.

தேசிய புலனாய்வு நிறுவனம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் உச்சநீதி மன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

ஐஸ் ஐஸ் இயக்கத்தின் சதி இதில் இருக்கிறதா என்பதை பற்றி அரிய பொது  மக்களுக்கு உரிமை இருக்கிறது.

அதைப்பற்றி உச்சநீதி  மன்றம் இதுவரை எதுவும் சொல்லாதது ஒரு குறையாகத்தான்  பார்க்கப் படும். .

This website uses cookies.