குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி டெல்லி இந்தியாவின் ரேப் கேபிடல் என்று பிரசாரத்தின் பேசினார்.
இன்று ராகுல்காந்தி இந்தியாவில் மேக் இந்தியா இப்போது ரேப் இன் இந்தியா ஆகிவிட்டது என்று பேசி சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் அதிகரித்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.
அதைத்தான் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.
ராகுலை எதிர்த்து பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அவையை நடத்த விடாமல் ரகளை செய்திருக்கிறார்கள்.
நான் என்ன ராகுல் சவர்க்கரா மன்னிப்புக் கேட்க. நான் ராகுல் காந்தி. மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று ராகுல் உறுதி காட்டுகிறார். உண்மையைத்தானே சொன்னேன் அதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவரது வாதம்.
பாலியல் குற்றங்களை தடுக்க எல்லாரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய கால கட்டத்தில் அதை அரசியலாக்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது ஆரோக்கியமான அரசியலாக இல்லை.
ஹைதராபாத்தில் நடந்த பெண் மருத்துவர் கொலைக்கு என்கவுன்ட்டர் செய்து நீதி வழங்கிய நிலையில் ஆந்திராவில் இத்தகைய குற்றங்களுக்கு 21 நாளில் விசாரணை முடித்து தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஜகன் மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார்.
ஏதாவது உருப்படியாக செய்யுங்கப்பா?
This website uses cookies.