மக்கள் தீர்ப்பை அலட்சியம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்திய மத்திய அரசு?
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க தயாராக இல்லை. தயாராக இருக்கும் சிவசேனையையும் ஆட்சி அமைக்க விட வில்லை. இதுதான் பாஜக வின் பாசிசம்.
ஆளுனரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிக்கலம் என்பதையும் செய்து காட்டி விட்டார்கள்.
எவருக்கும் ஒரு நாள் மட்டுமேதான் இதுவரை அவகாசம் கொடுத்து வந்திருக்கிறார்களா?
யார் தயார் என்று சொன்னாலும் அவர்களை சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டியதுதான் ஆளுநர் கடமை. ஆனால் எங்கே அவகாசம் கொடுத்தால் ஆட்சி அமைத்து விடுவார்களோ என்று உடனடியாக குடி அரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தி விட்டர்ர்கள்.
உச்சநீதிமன்றம் இவர்கள் தலையில் குட்டு வைத்தால்தான் திருந்து வார்களோ?