முதல் முறையாக பட்ஜெட்டை ஆங்கிலத்திலும் இந்தியிலும் படித்ததுதான் அருண் ஜெட்லியின் சாதனை. இந்தியை ஒருவழியாக பட்ஜெட் உரையில் திணித்தாகிவிட்டது.
இனி தொடரும் என்று உறுதி செய்யப் பட்டு விட்டது. எதில் வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள். அப்போதே மாநில மொழிகளில் பெயர்த்துச் சொல்லுங்கள். பிரச்னையே இல்லை. அது வரும் வரை இந்த திணிப்பை எதிர்த்துக் கொண்டுதான் இருப்போம்.
வருமான வரி விலக்கை ஐந்து லட்சம் ஆக உயர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. மாத வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் நாற்பதாயிரம் நிரந்தர விலக்கு என்று ஆறுதல் தர முயன்றி ருக்கிறார்கள்.
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப் பட வாய்ப்பில்லை. மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் 75,000 கோடி போதாது. தமிழகத்துக்கு என்று எந்த புதிய வாய்ப்பும் இல்லை.
250 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவங்களுக்கு மட்டும் ஐந்து சதம் வரி குறைப்பு செய்யப் பட்டிருக்கிறது.
பெரு நிறுவங்களுக்கு வழங்கப் படும் சிறப்பு சலுகைகள் நீடிக்கப் படும்.
வழக்கம் போல விவசாயம் சிறப்பு கவனம் பெறும் என்று சொல்லி விட்டு அதற்கான நிதி எங்கே இருந்து வரும் என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
குறிப்பிடும் அறிவிப்பு வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் 1.5 மடங்கு உயர்வு. இதை எப்படி அமுல் படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் இதன் உண்மைத் தன்மை வெளிவரும்.
பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. லாபகர விலை , உத்தரவாதமான பயிர் காப்பீடு , இடைத்தரகர் இல்லா சுலப சந்தைப் படுத்தும் வசதி இருந்தாலே விவசாயிகளுக்கு வேறு எந்த சலுகைகளும் தேவை இல்லை.
இந்த ஒரு அறிவிப்பை மட்டும் மோடி அரசு உறுதி செய்தால் அது விவசாயிகள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வெறும் வாய்ச்சவடால் என்பதே முந்தைய மோடியின் அறிவிப்புகளின் தன்மை.
எனவே நம்பகத் தன்மையை மோடி அரசு பெற வேண்டுமானால் எப்படி இந்த அறிவிப்புகளை அமுல் படுத்த போகிறார்கள் என்பதை வைத்தே எடை போடுவார்கள் மக்கள்.
இப்போது வந்திருக்கும் மூன்று பாராளுமன்ற இரண்டு சட்ட மன்ற இடைதேர்தல் களில்
பா ஜ க தோற்றிருப்பது மக்கள் பா ஜ வை நம்பத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.
This website uses cookies.