ஹிட்லரைப்போல் மோடி ரொம்பவும் நல்லவர் ?! 4 ஆண்டுகள் ஆட்சி சொன்ன சேதி ?!

Modi-hitler
Modi-hitler

மோடி ரொம்பவும் நல்லவர்.

வெற்றி ஒன்றையே இலக்காக கொண்ட செயல்படும் அரசியல்வாதி.

அதற்காக எதையும் செய்வார்.   குடும்பத்தை இழப்பார்.    தாம்பத்திய சுகத்தை நாடார்.  உணவுச் சுவையை  தவிர்ப்பார்.   சிற்றின்பங்களை துறப்பார்.  சொத்து சேர்க்கும் ஆசையை அறவே விலக்குவார்.   ரத்த உறவு  குடும்ப ஆட்சி குற்ற சாட்டிற்கு இடமே இல்லை.  ( ஆர் எஸ் எஸ் குடும்பம் விதிவிலக்கு)

ஒன்றில் மட்டும் குறியாக வாழ்கிறார்.   பதவி.   பதவி.  பதவி. அதில் உச்சத்தை தொட்டும் விட்டார்.

அதை அடைய உதவியது பெரு முதலாளிகள்.    எனவே தக்க வைக்கவும் அவர்கள் தயவு தேவை என்பதால் அவர்கள் நலனை மையப் படுத்தி எதை வேண்டுமானாலும் செய்வார்.

மறுபக்கம் ஆர் எஸ் எஸ் – அவருக்கு முகவரி கொடுத்தது.    அந்த சித்தாந்தம் வெற்றி பெற தன்னையே ஒப்புக் கொடுத்தவர் அவர்.  அவர்களுக்கு இவரும் இவருக்கு அவர்களும் முட்டு தாங்கிகள்.

அவர்களுக்கு இவர் பாரமாகும்போது கழற்றி விடப் படுவார்.  அதுவரை இவர் கொண்டாடப் படுவார்.

ஹிட்லர் ஒன்றும் கெட்டவர் அல்லவே.    தன் இனம் ஆள ஆசைப் பட்ட பாசக்காரர். அதற்காக  வெறும் அறுபது லட்சம் யூதர்களை கொல்ல நேர்ந்தது .    அவ்வளவுதான்.

போர் செய்து வெற்றி பெற பல லட்சம் பேர்களை பலி கொடுக்க நேர்ந்தால் அது தான் சிறந்த ஆட்சி.

இன்று மேல் தட்டு மக்கள் ஆட்சியை நிலைப்படுத்த யார் உரிமையை வேண்டுமானாலும்  காவு கொடுப்பது தவறல்ல.

இந்த நான்கு ஆண்டுகளில் ,   மோடி என்றால் நினைவுக்கு வருவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை.    இரண்டாயிரம் நோட்டுகள் காணாமல் போய் விட்டன.  எங்கே மோடி கொண்டு வருவதாக சொன்ன கறுப்புப் பணம். ?

வெளிநாடுகளில் பதுங்கிய கறுப்புப் பணம் எங்கே?

எல்லாம் போய் டிஜிட்டல் பரிவர்த்தனை சாதனையாகி விட்டது.

ஆறு கோடி கழிப்பறைகளும்  இந்தி சமஸ்க்ரித திணிப்பும் வெற்றி என்றால் மோடி வெற்றியாளர்தான்.

போட்டி போட சரியான எதிர்க் கட்சி இல்லை என்பது உணரப் படுகிறது.

ராகுல் போதவில்லை.   எல்லா எதிர்க்கட்சிகளும் குமாரசாமியின் பதவியேற்பில் கலந்து கொண்டது கொஞ்சம் நம்பிக்கையை விதைத் திருக்கிறது.    மரமாக வளர்கிறதா என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்.  ஜனதா பரிசோதனை எதனால் தோற்றது என்பதை இவர்கள் ஆராய்ந்தால் மீண்டும் அந்த தோல்வியை தவிர்க்கலாம்.

எது நடந்தாலும், தமிழ்நாட்டில் , விவசாயிகளை அழிக்க ஒன்ஜிசி முயற்சிக்கும் அத்துணை கிணறுகளும் மூடப் பட வேண்டும்.   மீனவர்களை அழிக்கும் அத்தனை திட்டங்களும் கைவிடப் பட வேண்டும்.      இந்தி சமஸ்க்ரித திணிப்பு நிறுத்தப் பட வேண்டும்.     நீட் மறுக்கப் படவேண்டும்.  இதற்கெல்லாம் காரணம் ஆன பா ஜ க நுழைய அனுமதிக்க முடியாது.

எங்கு வெற்றி பெற்றாலும்  இங்கு மோடி  தோற்பார்.