இஸ்ரோ விஞ்ஞானிகள் 300 கிலொ மீட்டர் தூரம் பயணம் செய்து செயற்கைக் கோள்களை அழிக்கும் ஏவுகணை தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது இந்தியாவின் ஆற்றலை உலகுக்கு பறை சாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து இந்த தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்திய விளங்குகிறது. நமக்கு பெருமைதான். இந்திய விஞ்ஞானிகள் இந்த ஏவுகணை 1000 கிமீ தூரம் வரைகூட போகும் என்கிறார்கள்.
முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் இந்த தொழில் நுட்பத்தை நாம் 2007 லேயே கொண்டிருந்தோம் என்கிறார். சீனா 12 ஆண்டுகளுக்கு முன்னரே இதை செய்து காட்டிவிட்டது.
இதை ஏன் பிரதமர் அறிவிக்க வேண்டும். நான் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லப் போகிறேன் என்று மோடி அறிவித்ததுமே ஏதோ அரசியல் அறிவிப்பாக இருக்கும் என்று பரபரத்தது ஊடகங்கள். ஆனால் மோடியோ விஞ்ஞானிகளின் சாதனையை கூறி விட்டு ஏதோ தன் அரசால் தான் இது முடிந்தது என்று தேர்தல் சாதனையாக கூறிக்கொண்டார்.
மக்கள் இதனால் எல்லாம் மோடி மீது கொண்டிருக்கும் கருத்தை மாற்றிக் கொள்ளப்போகிறார்களா என்ன?
ஏற்கனெவே விண்வெளியில் மாசுகள் படர்ந்திருப்பதற்கு அமேரிக்கா கவலை தெரிவித்திருக்கிறது .
எல்லா நாடுகளும் செயற்கை கோள்களை தங்கள் வசதிக்காக ஏராளமாக விண்வெளியில் ஏவி விட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு பிறகு வலு விழந்து விடும். ஆனாலும் விண்வெளியில் மிதந்து கொண்டிருப்பதால் என்னென்ன ஆபத்துக்கள் நேரும் என்பதை கணிக்க வேண்டும்.
இது தொடர்பாக மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறியதா என்பது குறித்து மார்க்சிஸ்டுகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கையா எடுக்கப் போகிறது.
கடைசிவரையிலும் மக்களை திசை மாற்ற முயற்சிப்பதை மோடி மாற்றவே மாட்டார்.