ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிரதமர் மோடி எழுப்பியது சரியா?

Narendra_Modi
Narendra_Modi

ராம்லீலா  கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதர் மோடி புதிய சர்ச்சையை கிளப்பினார்.

எப்போதும் டெல்லியில் கலந்துகொள்ளும் பிரதமர் அடுத்த ஆண்டு உ பி யில் வர இருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இந்த ஆண்டு லக்னோவில் கலந்து கொண்டார்.

”   ஜெய் ஸ்ரீராம் கோஷம் எல்லா வீடுகளுக்கும் சென்று அடைய வேண்டும். வீடு வீடாக செல்லுங்கள் ‘ என்றும் பிரச்சாரம் செய்தார்.

பிரதமர் ஒருவர் தன் இஷ்ட தெய்வத்தை வணங்க கூடாதா?     வணங்குவது வேறு? அதையே பிரச்சாரமாக செய்வது வேறு!

இதுவரை எந்த பிரதமரும் இம்மாதிரி மத கோஷங்கள் எழுப்பியதாக தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் காவேரி ஆணையம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்ல அடுத்த ஆண்டு வர இருக்கும் கர்நாடக  பொது தேர்தல் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இப்படி அரசியலுக்கு மதத்தை பயன்படுத்துவதா என்ற கேள்வியை எழுப்பி கலைஞரும் ஒரூ அறிக்கையை வெளியிட்டார்.

உடனே கலைஞர் இந்து விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது உண்டா  முஸ்லிம் கிறித்துவ விழாக்களுக்கு மட்டுமே வாழ்த்து சொல்கிறார் என்ற கண்டனமும் எழுந்தது.

உண்மைதான்   கலைஞர் நாத்திக இந்து. தன்மான இந்து.  சக பிராமணீய ஆதிக்கத்தில் அமிழ்ந்து கிடக்கிற இந்துக்களை அவர் எப்படி வாழ்த்த முடியும்?

சன்னி முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை மட்டுமே இறுதி தூதராக ஏற்கிறார்கள்.     ஷியா முஸ்லிம்கள் நாயகம் அவர்களின் பேரன் இமாம் உசைன் அலியின் தியாகத்தை போற்றி முகரம் கொண்டாடுகிறார்கள்.     எனக்கு தெரிந்து முகரம் வாழ்த்து சொல்லும் சன்னி முஸ்லிம் இல்லை. ஏனெனில் அவர்களுக்குள் கொள்கை முரண்பாடு இருக்கிறது.

அதைப் போல்தான் இந்துக்களுக்குள் பார்ப்பனீய கொள்கைகளை ஏற்றுகொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று இரண்டு வகை இருக்கிறார்கள்.   அதில் கலைஞர் போன்ற திமுக தொண்டர்கள் தன்மான நாத்திக இந்துக்கள்.

இவர்களுக்கு  எந்த சம்பிரதாயமும் இறுதி இல்லை. எந்த சடங்கு களும்   தேவையும்   இல்லை.     ஒன்றே குலம் ஒருவனே   தேவன் என்று  வாழ்பவர்கள்.

ஆனால் கிறிஸ்தவ முஸ்லிம்கள் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் எந்த மன மாச்சரியமும் இருக்காது.

இந்து என்றால்  திருடன் என்றார் என்றும் விமர்சிக்கிறார்கள்.  ஆமாம்.    பாரசீகத்தில் இந்து என்றால்  திருடன் என்று  ஒரு பொருள் இருக்கலாம்.   ஆனால் கலைஞர் சொன்ன பொருள் பிற்பட்ட தாழ்த்தப் பட்ட மக்களின் நலத்தை படிப்பை வளத்தை சுரண்டிய திருடர்கள் என்று தங்களை அழுத்தி வைத்திருந்த ஆதிக்க சக்திகளை அப்படி சொல்லி இருக்கலாம்.

எப்படி பார்த்தாலும் கலைஞர் சுட்டிக் காட்டியபடி பிரதமர் மோடி அவர்கள் அரசியலில் மதத்தை கலக்காமல்   . பார்த்துக் கொள்ள கடமைப் பட்டவர்.