Go back Modi – இணையத்தில் உச்சத்தை தொட்டது.
கறுப்புக் கொடி ,கருப்பு வண்ண பலூன்கள் ,மறியல், ஆர்ப்பாட்டம் , கைதுகள் என்று தமிழகமே கொந்தளித்த வேளையில் பிரதமர் மோடி வானில் பறந்தபடியே வந்து ராணுவ தளவாட கண்காட்சியை திறந்து வைத்து விட்டு சம்பிரதாய உரை ஒன்றை ஆற்றி விட்டு பறந்து போனார்.
ஒருவர் தீக்குளித்து மரணம் மற்றொருவர் ரயில் விபத்தில் மரணம் என்று இழப்புகள். அநேகமாக எல்லா கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.
இத்தனை எதிர்ப்புக்கிடையில் வந்த மோடி மக்கள் போராடிக்கொண்டு இருக்கிற பிரச்னை பற்றி ஏதாவது பேசுவார் என்று எல்லாரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஒரு சர்வாதிகாரிக்கே உரிய இலக்கணத்தோடு காவிரி பற்றி வாய் திறக்க மறுத்தார் மோடி.
சட்டம் தன் கடமையை செய்யும் – நீதி நிலைநிறுத்தப் பெறும்- யாருக்கும் பாகுபாடு காட்ட மாட்டோம் என்று ஏதாவது சொல்லியிருக்கலாம்.
எதையுமே சொல்லாமல் மௌனியாக திரும்பியதன் மூலம் தமிழர்களின் பெரு வெறுப்பை மேலும் சம்பாதித்து இருக்கிறார் மோடி.