2017 ம் ஆண்டு மருத்துவ படிப்பில் , நீட் தேர்வில் , 400 மாணவர்கள் இயற்பியல், வேதியியல் தேர்வுகளில் ஒற்றைப் படை மார்க்குகள் வாங்கியும் 110 மாணவர்கள் 0 மார்க்குகள் பெற்றும் , தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.
மார்க்கே வாங்காதவர்கள் கூட மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்க முடியும் என்றால் ஏன் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும்?
150 க்கும் குறைவான மதிப்பெண் வாங்கியவர்கள் தர வரிசையில் இடம் பிடித்து 1990 பேர் தனியார் நிகர் நிலை பல்கலை கழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இயற்பியல் வேதியியல் பாடங்களில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் எப்படி சிறந்த மருத்துவர்களாக பணியாற்ற முடியும்?
+2 தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் கள் கட்டாயம். நீட் தேர்வில் அது தேவையில்லை என்றால் எது நல்ல தேர்வு?
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே நியாயம்.
கட்டாய நீட் என்பது ஒருவகை பலாத்காரம். ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றம்.
பல வகை பாடத் திட்டம். ஆனால் ஒரு வகை பாடத் திட்டத்தில் தான் கேள்விகள் என்பது அநீதி .
உச்ச நீதி மன்றம் தான் தலையிட்டு நல்ல தீர்ப்பு தர வேண்டும்.