உண்டியல் வசூலில் அர்ச்சகருக்கு பங்கு இல்லை; உயர்நீதி மன்றம்தீர்ப்பு !

பல நூற்றாண்டுகளாக கோவில் உண்டியல் வசூலில் அர்ச்சகர் களுக்கு பங்கு கொடுக்கப் பட்டு வருகிறது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள   கோவில்களில் உண்டியல்கள் வைப்பதை பார்ப்பன அர்ச்சகர்கள் விரும்புவதில்லை.

ஏன் என்றால் கோவிலுக்கு  வருகை தரும் பக்தர்கள் கோவிலுக்கு தர விரும்பும் காணிக்கையை அரச்சகர் களின் தட்டில் போடுவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

சிதம்பரம் நடராசர் கோவிலில் உண்டியல் வைப்பதை தீட்சிதர்கள் எதிர்த்தார்கள்.    அவர்கள் பொறுப்பில் இருந்தபோது வசூல் கணக்கை அவரால் சில ஆயிரங்களுக்கு மேல் காட்டியதே இல்லை  .     அறநிலையத்துறை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு உண்டியல் வைத்தபோது வசூல் கோடிகளை தாண்டியது.      இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனை கோடிகளை இவர்கள் கொள்ளையடித் திருப்பார்கள்?

அருள்மிகு நாச்சியார்  தேவஸ்தானம் உண்டியல் வைத்தபோது தங்களுக்கு பங்கு தர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கி யதாக சொன்ன பட்டர்கள் அதற்கு ஆதாரமாக  1918 ல் உள்ளூர் முன்சீப் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஆதாரமாக காட்டினார்கள்.

ஆனால்  2011  ல் ஒரு இணை ஆணையாளர் இந்த அர்ச்சகர் பங்கை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.   பட்டர் கோர்ட்டுக்கு போக ஒரு தனி நீதிபதி பட்டருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் .  அதை எதிர்த்து நிர்வாக அதிகாரி மேல்முறையீடு செய்தபோது  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு,   Installation , Safeguarding and Accounting of Hundials Rules 1975  படி அர்ச்சகர் களுக்கு எட்டில் ஒரு வீதம் தர எந்த முகாந்திரமும் இல்லையென கூறி பட்டர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

இந்த சட்டத்தின் படி உண்டியல் காணிக்கைகளை உடனடியாக நிறுவனத்தின் கணக்கில் வரவு வைத்து வங்கியில் செலுத்த வேண்டும் .   எனவே இணை ஆணையரின் உத்தரவு செல்லும் என்பது நீதி மன்ற உத்தரவு.   இதை எதிர்த்து பட்டர் உச்ச நீதி மன்றம் சென்றாலும் செல்வார். அவர்களுக்குத்தான் ஆட்கள் இருக்கிறார்களே?

அதே நேரத்தில் தட்டில் தரப்படும் காணிக்கைகளை நீதிமன்றம் அனுமதி தடை செய்ய வில்லை.

அதுதான் தடை செய்யப் பட வேண்டியது.

இறைவன் சந்நிதியில் பாகுபாடு காட்ட இந்த காணிக்கைகள் தான் பயன் படுகிறது.

பணம் உள்ளவன் இல்லாதவன் இடையே பாகுபாடு காட்டப் படுகிறது.

இந்து முன்னணி பார்ப்பனர்கள் கட்டண முறையை ஒழிக்க வேண்டும் என்பார்கள். ஏன் தெரியுமா?  அந்த காணிக்கைகள் அர்ச்சகர் தட்டில் வந்து விழ வேண்டும் என்பதற்காகத்தான்.

பணம் உள்ளவர்கள் கட்டணம் கட்டினால் மிக அருகே சென்று தரிசனம் செய்யலாம். மற்றவர்கள் தூரத்தில்.   ஆக இறைவனை காண காசு உள்ளவர்கள் அருகில் செல்லலாம்.   மற்றவர்கள் தள்ளி நின்று தரிசிக்கலாம்.    என்ன கொடுமை இது?    இறைவன் அப்படியெல்லாம் பேதம் பார்ப்பானா?

திருப்பதி லட்டு பிரசாதம் வசூலில் அங்கே பார்ப்பனர் அர்ச்சகர்களுக்கு பங்கு தரப் படுகிறது.    இதற்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று தங்கள் வசூலை  அவர்கள் உறுதி செய்கிறார்கள். எத்தனை பக்த கோடிகளுக்கு இந்த உண்மைகள் தெரியும்?

கோவில்களின் வருவாய் அதன் செலவினங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட வேண்டும்.    வேண்டுபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.   கேட்டு கொள்ளட்டும் என்பது ஏமாற்று வேலை.  கோவில் வலை தளத்தில் வைத்து விட்டார் வேண்டுபவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

பயிற்சி பெற்ற எல்லாரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும்.    அவர்களுக்கு மாத ஊதியம் தர வேண்டும் ..    எந்த வகையிலும் தனிப்பட்ட காணிக்கைகள் தடை செய்யப் பட வேண்டும்.

அப்போதுதான் நீதி  நிலை பெறும்.