புராண காலத்து சரஸ்வதி நதியை தேடும் பா ஜ க மத்திய அரசு??!!           

saraswati-river

வேதங்கள்  மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் சரஸ்வதி நதி சட்லெஜ் நதிக்கு மேற்கில் பாய்ந்த தாகவும் காலபோக்கில் பாலைவனத்தில் வறண்டு விட்டதாகவும் மதவாதிகள் கூறி வருகின்றனர்.

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்கு புலப்படாத வகையில் சரஸ்வதி நதி வந்து கலக்கிறது என்றும்  சொல்லி வருகிறார்கள்.

அதை நிரூபிக்க வேண்டி பாஜக அரசு பல ஆராய்ச்சிகளுக்கு பல கோடிகளை செலவிட்டு வருகிறது.

முன்பு 2002 ம் ஆண்டில் பா ஜ க அரசு மீட்பு திட்டம் ஒன்றை உருவாக்கி பல்வேறு பணிகள் நடந்தன.   காங்கிரஸ் அரசு அதை அறிவியலுக்கு முரணானது என்று கைவிட்டது குறிப்பிடத் தக்கது.

இப்போது மீண்டும்  பா ஜ க அரசு பேராசிரியர் வால்டியா  தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து ஆறு மாத ஆய்வு அடிப்படையில் ஒரு அறிக்கையை பெற்று ‘   ஆமாம் சரஸ்வதி நதி இருந்தது உண்மைதான் . 4000   கி மீ நீளம் உள்ள அந்த நதி இப்போதைய பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதியும் இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதியும் இருந்தது. அவை 5500  ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் ‘  என்று கூறத் தொடங்கி வுள்ளது.

உமாபாரதி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்கிறார்.

இதன் மூலம் பா ஜ க அரசு என்ன சொல்ல விரும்புகிறது.?

புராணங்களில் சொல்லப் பட்டவை எல்லாம் கற்பனையல்ல . உண்மைதான் . எனவே புராணங்களில் சொல்லப்பட்ட இதர விபரங்களும் உண்மைதான் என்று மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது.

இந்த முயற்சிகளுக்கு மத சார்பற்ற அரசின் பொருள் விரயம் செய்யப் படுவது தேவையா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்த பழந் தமிழகம் கடல் கொண்ட தாக வரலாறு சொல்கிறது.     இலங்கையும் இந்தியாவும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்தது என்றும் சொல்கிறார்கள்.   அதைப் பற்றி ஆய்வு செய்ய எந்த அரசும் எந்த முயற்சியும் செய்ததாக தெரியவில்லை.

சேது சமுத்திர திட்டத்தை முறியடிக்க இல்லாத ராமர் பாலம் பயன்  படுத்தப் பட்டது.     வேறு பாதையில் அமுல் படுத்துவோம் என்ற உறுதி மொழியும் எப்போது அமுல் படுத்தப் படும் என்று தெரியவில்லை.

வேதங்களை படிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் .  நாங்கள் சொல்லும் விளக்கங்களை மட்டும் நீங்கள் நம்ப வேண்டும் என்பதுதனே  வேதங்கள் பொறுத்து பார்ப்பனர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

அவர்களின் ஆதிக்கம் நிலைக்க சான்றுகளை தேடும் முயற்சிக்கு அரசு செலவழிக்க வேண்டுமா??  சட்டம் இடம் கொடுக்கிறதா???

நீதிமன்றங்கள் தான் தீர்வைத் தர வேண்டும்.