கிருஷ்ணகிரியில் சேலத்தில், தேனியில் மதுரையில் என நான்கு இடங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.
மாநில உரிமைகளை அடக்கி வைக்க முனையும் பாஜக எங்கே? மாநில உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் ராகுல் எங்கே என்று மக்கள் வியக்கும் வண்ணம் அவரது பேச்சு இருந்தது.
ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதே பாஜகவின் கொள்கை.
இதற்கு மாறாக இந்தியா பலவித கலாச்சாரங்களை கொண்ட அற்புதமான நாடு என்றார் ராகுல். அதுதானே உண்மை. ஆனால் அதை ஒப்புக்கொள்ள பாஜக என்றுமே தயாராக இருந்ததில்லை.
பாஜக அதிமுகவை அடிமைப் படுத்தி வைத்திருப்பதை சுட்டிக் காட்டி தமிழக மக்களை ஒருபோதும் அடிமைப்படுத்திவிட முடியாது என்றார்.
ஜிஎஸ்டி-யால் தொழில்கள் அழிந்ததை சுட்டிக்காட்டி அதை மறு சீரமைப்பு செய்வோம் என்றார். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ரயில்வேக்கு தனி பட்ஜெட், என்று உறுதியளித்த ராகுல் தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள அனுமதிக்க மாட்டோம் என்றார்.
நீட் தேவையா என்பதை அந்தந்த மாநில மக்களே முடிவு செய்து கொள்வார்கள் என்று உறுதியளித்தார்.
மொத்தத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தந்த மகிழ்ச்சியை தமிழ்நாடு வந்த ராகுலின் பேச்சு இன்னும் உயர்த்திப் பிடித்து தமிழ் மக்களுக்கு ஒரு புது தெம்பையே அளித்து விட்டது.
Unity in Diversity -பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பதன் உண்மையான பொருளை ராகுல் காந்தியின் பேச்சு வெளிப் படுத்தி விட்டது.
வலிமையான மாநிலங்கள் மட்டுமே வளமான பாரதத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை பிரதி பலித்த ராகுல் காந்தியின் பேச்சு உண்மையிலேயே வரலாற்று சிறப்பு வாய்ந்ததுதான் !!!