ராஜ் தாக்கரே வின் மிரட்டல் அரசியல்? பணிந்த முதல் அமைச்சர் !!

raj-thackeray

உரி தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்  இந்தியா  இடையே உரசல் அதிகமானதும் இந்தியா மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் நிலை குலைந்து போய் அடுத்த தாக்குதலுக்கு தயாராவதும்  பாகிஸ்தானில் நடை பெற இருந்த சார்க் மாநாடு தள்ளிப் போனதும் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்த ஏ தில் ஹை முஷ்கி  என்ற இந்திய தயாரிப்பாளர் தயாரித்த சினிமாவை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்தும் அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் தலையிட்டு மூன்று நிபந்தனைகளுடன் படத்தை வெளியிட சமரசம் பேசி உள்ளார்.

உரி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி ஸ்லைடு, எதிர் காலத்தில் பாகிஸ்தான் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ராணுவ நிதிக்கு ஐந்து கோடி என்பன நிபந்தனைகள்.

இப்படி மிரட்டி வாங்கப் படும் பணம் எங்களுக்கு வேண்டாம் என்று ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

ஒரு முதல்வரின் வேலை இதுவா?    மிரட்டி பணம் பிடுங்கியா தேச பக்தியை நிரூபிக்க வேண்டும்?

இருநாட்டு பிரச்னைகளுக்கு அப்பா ற்பட்டது களை.    பாகிஸ்தான் மக்களோடு இந்தியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

அங்கே ராணுவம், தீவிரவாதிகள் ,அரசு என்று மூன்று அதிகார மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

இன்னமும் இந்திய பாகிஸ்தான் இடையே வர்த்தகக உறவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த  பனிரெண்டு  வருடங்களில் இரு நாடுகளுக்கு இடையே  எட்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.   அதாவது   345 மில்லியன் டாலரிலிருந்து   2.6  பில்லியன் டாலராக உயர்ந்திருகிறது .

வர்த்தக உறவை நிறுத்தினால் இந்தியாவுக்குத்தான் இழப்பு அதிகம்.  ஏனெனில் நாம் செய்யும் இறக்குமதியை விட ஏற்றுமதிதான் அதிகம்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்குவது  உண்மைதான் என்றாலும் அதை சமாளிக்க வேறு வகைகளில் வழி தேட   வேண்டுமே தவிர  உள்நாட்டு போலி தேசியவாதிகளின் மிரட்டலுக்கு ஒரு அரசு அடி பணிவது ஆபத்தானது.

ராஜ் தாக்கரே அரசியல் செய்வதற்கு தேசியம்தானா  கிடைத்தது??!