சபாநாயகருக்கு எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது- ராஜினாமா செய்தவர்கள் சட்ட மன்றத்திற்கு போகலாம் போகாமலும் இருக்கலாம்.-இப்படி ஒரு இடைக்கால தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது.
இதன்மூலம் சபாநாயகர் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ளலாம் மறுக்கவும் செய்யலாம். தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பது வேறு?
இதில் எதை செய்தாலும் நாளை நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த பாதிப்பையும் அது ஏற்படுத்தாது.
ஆளும் கட்சியின் வலு 101 ஆகவும் பாஜகவின் வலு 107 ஆகவும் இருக்கும். எனவே வெறும் எண்ணிக்கை அடிப்படையில் குமாரசாமி ஆட்சி கவிழும் என்பதுதான் இன்றைய எதார்த்த நிலை.
வேறு ஏதாவது அதிசயம் நடந்தால் தவிர குமாரசாமி ஆட்சியை காப்பாற்றுவது கடினம்.
ஆனால் கட்சி தாவல் பாதுகாப்பு சட்டம் ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று பாஜக திட்டமிடலாம். அது ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் அடிப்படை உரிமை என்று கூட வாதிடலாம்.
ஆட்சியை பிடிக்க எந்த எல்லைக்கும் பாஜக போகும் என்பதற்கு கர்நாடகமே உதாரணம்.