சிம்பு முன்பு பாடலில் பிரபலம் ஆனது ‘ வேறு’ விதமான ஒன்று.
ஆனால் இப்போது கபிலன் வைரமுத்துவின் வரிகளில் பாடியிருக்கும் பணமதிப்பு ரத்து மற்றும் ஜி எஸ் டி பற்றிய பாடல் ஓராண்டில் ப ஜ க அரசின் இரண்டு கொள்கைகளும் நாட்டில் ஏற்படுத்தி இருக்கும் நாசத்தை விளக்கி கிண்டல் அடித்து மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
யாரும் கேட்காமலேயே அவரது வீட்டுக்கு போலிஸ் காவல் போடும் அளவுக்கு பா ஜ க வை துவைத்து எடுக்கிறது அந்த பாடல்.
இதோ அந்த ஆவேச வரிகள்;
காந்தி நோட்டு ரெண்டும் அம்பேல் ஆகி போயாச்சு
வாழ்க்கை ஏ டி எம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சு
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவில் வந்தாச்சு
காத்துக் கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு
நடுத்தரத்த நல்லா வச்சு செஞ்சாச்சு
சில்லரைக்குத்தான் டங்குவாறு அந்தாச்சு
மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க
பாரினுதான் போயாச்சு
நோ கேஷ் கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்
பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்
கண்ணே தொறக்காம படம் பாக்கலாம்
பேக்கு நோட்டு போல் வாழ்க்கை மாறி போயாச்சு
ப்ரேகிங் நியூசை பாத்து லூசு மோஷன் ஆயாச்சு
வெள்ள மனசு சேத்த பணம் செல்லாமலே போயாச்சு
கருத்த மனசு சேத்த பணம் வெள்ளை கலர் ஆயாச்சு
குடிமகனா ஒத்துழைப்பை தந்தாச்சு
கண்டபடிக்கு நம்பிக்கையை வச்சாச்சு
வரிசையிலே பெரிசு சிறுசு எல்லாருமே நின்னாச்சு
முடிஞ்சிதுன்னு நினைச்சாக்கா ஜி எஸ் டி வந்தாச்சு
நோ கேஷ் கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா
குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா
நாட்ட மாத்த வேணு முனு நீங்க நினைச்சா
கோட்டு போட்ட குண்டர்களின் சங்கப் புடிங்கடா
நோ கேஷ் கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்
டிமானிடைசேஷன் டிமானிடைசேஷன் டிமானிடைசேஷன்
மாறுமா நம்ம நேஷன் கேள்வி கேட்டா போலிஸ் ஸ்டேஷன்
இது கோலுமாலு க்லோபலை சேஷன் ஆயாச்சு
இது கோலுமாலு க்லோபலை சேஷன்
ஒரே கன்பியுஷன் என்ன வாழ்க்கைடா இது
இந்த பாட்டு புதுமுகம்கள் நடித்துள்ள தட்றோம் தூக்குறோம் என்ற புதிய படத்தில் இடம் பெறுகிறதாம்.
பா ஜ க பெரிய புத்தி மனிதர்கள் விஜயின் மெர்சல் படத்துக்கு தங்கள் மொக்கை வசனங்களால் தாக்கி தந்த விளம்பரத்தை இந்தப் படத்துக்கும் தரப் போகிறார்களா?
புத்திசாலித் தனமாக அடக்கி வாசிக்கப் போகிறார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்??!!