Connect with us

மோடியை இழிவுபடுத்திய மராட்டிய பாஜக? பார்ப்பனீயத்தை வென்ற மராத்தாக்கள்

bjp

இந்திய அரசியல்

மோடியை இழிவுபடுத்திய மராட்டிய பாஜக? பார்ப்பனீயத்தை வென்ற மராத்தாக்கள்

ஒருவழியாக நான்குநாள் முதல்வராக இருந்த பட்னாவிஸ் ராஜினாமா செய்து விட்டார்.

இறுதிவரை பார்ப்பனர் ஆட்சியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய் மராத்தாக்கள் ஆட்சியை பிடித்து விட்டார்கள்.

மேலெழுந்த வாரியாக பார்த்தால் இதில் சாதி எங்கே வரும் என்றுதான் தோன்றும். ஆனால் பட்னாவிஸ் தலைமையை மீண்டும் கொண்டு வர சங்கப் பரிவாரங்கள் நடத்திய சூழ்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டால் இதில் சாதி எந்த அளவு  பங்கு வகித்தது என்று புரியும்.

சரத் பவாரிடம் இருந்து அஜித்தை பிரிக்க திட்டமிட்டதை என்னவென்று அழைப்பது ?

கடைசியில் தனி மரமாக அஜித் நின்றபோதுதான் இனி முடியாது என்ற  உண்மை உரைத்தது பட்னாவிசுக்கு.

இதில் ஏன் பிரதமரை இழிவுபடுத்தினார்கள் என்பதுதான் அவர்கள் யார் என்பதை புரிய வைக்கும். பதவிக்கு வருவதற்காக யாரை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். அவர்கள் மரியாதை பறிபோகும் என்பதை பற்றிக் கூட கவலைப் படமாட்டார்கள்.

நள்ளிரவில் எடுத்த முடிவை அதிகாலையில் அமுல்படுத்த அமைச்சரவை கூடி எடுக்க வேண்டிய குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக்கொள்வது என்ற முடிவை ஏன் பிரதமரின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி அமுல்படுதினார்கள்?

ஆராயாமல் எடுத்த முடிவால் இன்று பிரதமர், ஆளுநர், குடியரசுத் தலைவர் என்று எல்லாருக்கும் அவமானம். மோடியின் பெயர் கெட்டால் பரவாயில்லை என்பதால் தானே?

இப்படியா அவர்களை அவமானப்படுத்துவது ?

உச்சநீதிமன்றம் நாளை வாக்கெடுப்பு என்று அறிவித்த உடனேயே கலகலத்து விட்டது  பாஜக .

சிவசேனாவை குற்றம் சாட்டுகிற பாஜக தேர்தலுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி பேசி முடிவெடுத்தோம் என்று உத்தவ் தாக்கரே சொன்னபோது உடனேயே ஏன் மறுக்கவில்லை? 

இந்துத்துவத்தை பாஜக வுக்கு முன்பே மராட்டியத்தில் முழங்கியது சிவசேனா. பெரிய கட்சியாக இருந்த சிவசேனாவுடன் கைகோர்த்து ஜூனியர் பார்ட்னராக சேர்ந்து ஒரு கட்டத்தில் அவர்களை மைனாரிட்டி பார்ட்னர் ஆக்கிய பாஜக பதவியை பங்கிட்டுக் கொள்ள தயங்கியதுதான் இருபத்து ஐந்து ஆண்டு கூட்டு உடையக் காரணம். இனி ஒட்டாது?

பாஜகவின் உண்மை முகம் மராட்டியத்தில் வெளிப்பட்டு விட்டதுதான் இந்திய அரசியலில் திருப்பு முனை.

இனி யாரும் அவர்களுடன் சேர யோசிப்பார்கள். அதிமுகவுக்கே பயம் வந்துவிட்டதே?

ஒருவகையில் சிவசேனை என்ற மாநில கட்சி மாநிலத் தலைமை வகிப்பது நல்ல முன்னேற்றம். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top