முன்பே பொதுமேடையில் எழுதி இருந்தோம். மராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் என்று.
இன்று அதுதான் நடந்து இருக்கிறது.
இரவு வரை சிவசேனா முதல்வர்; தேசியவாத காங்கிஸ், காங்கிரஸ் துணை முதல்வர்கள், குறைந்த பட்ச செயல் திட்டம் கூட்டணி ஆட்சி என்று இருந்த நிலை மாறி நள்ளிரவு நேரத்தில் நடந்த பேரம் முடிந்து அதிகாலை ஐந்து மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு ஏழரை மணிக்கு தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் அஜீத பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்கிறார்கள் என்றால் இந்திய நாட்டில் ஜனநாயகம் இனி நிலைக்குமா என்ற கேள்வி ஏழுகிறதா இல்லையா?
தேசியவாத காங்கிரசும் குடும்பமும் உடைந்து விட்டது என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே எழுதுகிறா. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு நேற்றைய தினம் சரத் பவார் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என்று அறிவித்த போதுகூட கூட இருந்து நள்ளிரவில் திடீர் என்று பாஜகவுக்கு தாவி துணை முதல்வர் பதவி ஏற்கிறார் என்றால் திரை மறைவில் அதுவரை பேரம் நடத்திக் கொண்டு இருந்தார் அஜித் பவார் என்றுதான் பொருள்.
அஜித் பவார் மீது வழக்கு பதிவு செய்து மிரட்டிக் கொண்டிருந்தது மத்திய வருமான வரித்துறை. அதன் தொடர்ச்சியா இந்த முடிவு என்ற கேள்விக்கும் பதில் தெரிய வேண்டும்.
மராட்டியத்தின் எட்டப்பன் என்ற பெயரை எடுத்து விட்டார் அஜித் பவார்.
இன்று மாலை நான்கரை மணிக்கு நடக்கும் தேசியவாத காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு தெரிந்துவிடும். 22 பேரை தன்னுடன் அஜித் வைத்திருப்பதாக சொல்லப் படுகிறது.
ஏற்கெனெவே பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்தபோது பிற கட்சி மற்றும் சுயேட்சைகள் 29 பேரில் 16 பேரை இழுத்து வைத்தும் எண்ணிக்கை 145 வராததால்தான் உரிமை கோரவே இல்லை பாஜக.
இன்றும் மோசடி செய்துதான் எண்ணிக்கையை காட்டி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
ஆளுநர் ஆளும்கட்சி என்பதால் ஆட்டுவிக்கிற படி ஆடியிருக்கிறார். இல்லை என்றால் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டுமா வேண்டாமா?
எல்லாருக்கும் ஒருநாள் மட்டுமே அவகாசம் கொடுத்த ஆளுநர் இப்போது பட்னாவிசுக்கு எத்தனை நாள் அவகாசம் வழங்கி இருக்கிறார்.?
வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. இருக்கும்போதே இத்தனை மோசடி என்றால் உச்சநீதி மன்றத்தை இவர்கள் மதிப்பது இவ்வளவுதானா?
காங்கிரசும் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவே இல்லை.
கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டதில் காங்கிரசுக்கு அதிக பங்கு உண்டு. கூட்டணியை உறுதி செய்வதில் காங்கிரஸ் காட்டிப் மெத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் ஆட்சி பறிபோனது.
மராத்தா மக்களின் உரிமைக்கு சிவசேனாவும் தேசியவாத காங்கிரசும் முன்னுரிமை கொடுத்தாலும் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கைகள் தேசிய வாத காங்கிரசுக்கு உடன்பாடு இல்லாதது.
25 ஆண்டுக்கால கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவிற்கு எதிராக் சிவசேனா வந்தது என்றால் அதற்கு பாஜகவின் வஞ்சகத்தை சிவசேனா புரிந்து கொண்டதுதான் காரணம்.
மராட்டியத்தில் முன்பு சிவாஜி மகாராஜாவின் மகன் களுக்குள் எழுந்த வாரிசு உரிமை சண்டையில் இடையில் புகுந்து பெயரளவுக்கு மராத்தா மன்னன் அமைச்சராக இருந்த பேஷ்வாக்களின் கையில் உண்மையான அதிகாரம் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள் பார்ப்பனர்கள்.
அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. வரலாறு திரும்புகிறது. பாடம் படிக்க வேண்டிய மராத்தாக்களில் ஒருவர் காட்டிக் கொடுத்து பதவியில் பங்கு வாங்கி பார்ப்பனர் ஆட்சியில் அமர்வதற்கு துணை போயிருக்கிறார்.
இந்திய துணை கண்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன நிகழும் என்பதற்கு கட்டியம் கூறி இன்று மராட்டியத்தில் பார்ப்பனீயம் வென்று கொண்டிருக்கிறது.
ஆனால் அறம்தான் இறுதியில் வெல்லும்
அதையும் வரலாறு எழுதும்.
This website uses cookies.