இந்திய அரசியல்

பிறமொழி மாணவர் தமிழ் கற்க இரண்டாண்டுகள் போதாதா?

Share

எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி பள்ளிகளில் கட்டாயப் பாடமாகத்தான் இருக்கிறது.

தி மு க அரசு  Tamilnadu Tamil Learning Act 2006  கொண்டு வந்து தெலுங்கு , உருது, கன்னட , மலையாள மீடியம் பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொள்வதை கட்டாயம் ஆக்கியது.

வேற்று மாநிலத்தில்  இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் தமிழ் கற்றுக்  கொள்ள கெடு நான்கு ஆண்டுகள்.   இந்த காலக்  கெடு போதும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

சட்ட மன்றத்தில் இந்தக் கெடுவை நீட்டிக்க திமுக உறுப்பினர் ஓசூர் ஒய் பிரகாஷ் கோரிக்கை விடுத்தார்.

சட்ட மன்றத்தில்  தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒய் பிரகாஷ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இருவரும் தெலுங்கிலேயே பேசினார்கள்.   ஆனால் அதை மொழி பெயர்த்து  தெலுங்கில் தருமாறு சபாநாயகர் கேட்டார்.   ஏனெனில் மொழிபெயர்ப்பு செய்ய அவையில் ஏற்பாடு இல்லை.

முந்தைய சட்ட மன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் சட்ட மன்றத்தில் தெலுங்கிலேயே பேசுவார்.   அதற்கு ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் தருவார்.

பத்தாண்டுகள் ஆனபின்பும் தமிழ் தமிழ்நாட்டு பள்ளிகளில் கட்டாயம் என்ற சட்டம் அமுல்படுத்தப் படாதது வருந்தத் தக்கது.

தமிழைக் காக்க இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை.

பிற மாநில மக்கள் படையெடுப்பு தமிழகத்தில் அதிகம் உள்ளது.     அது அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும்  உரிமை.   யாரும் எங்கேயும் வாழலாம்.   ஆனால் அந்தந்த மாநில மொழிகளை மதித்து வாழ வேண்டும்.  கற்று வாழ வேண்டும்.

மும்பைக்கும் டெல்லிக்கும் சென்று பிழைக்கும் தமிழர்கள் மராட்டியையும் இந்தியையும் கற்றுக் கொண்டுதான் வாழ வேண்டும்.

அதற்கு தமிழகம் விலக்கல்ல.

மற்ற மாநிலங்களில் இருந்து நாம் என்னை பாடம் கற்றிருக்கிறோம் ?

This website uses cookies.