deepikapadukone
பத்மாவதி பட கதாநாயகி தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்து இருக்கிறார்.
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் கபூர் நடித்திருக்கிறார்.
சுல்தான் பேரழகி பத்மாவதியை விரும்பி படை எடுப்பதகவும் இறுதியில் பத்மாவதியை ஒரு கண்ணாடி மூலம் காட்டுவதாகவும் ஒரு கதை உலவுகிறது. அத்துடன் சுல்தானிடம் சிக்காமல் இருப்பதற்காக ராணியும் அவரது தோழிகளும் ஆயிரக்கணக்கில் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வதாகவும் ஒரு கதை உண்டு .
ராஜ புத்திரர்கள் ராணியை தங்கள் குல தாயாக வணங்கி வழிபடுவது உண்மைதான்.
ஆனால் அவரது கதையை சினிமாவாக எடுக்க கூடாது என்று எந்த தடையும் இல்லை.
ஏறத்தாழ 180 கோடி செலவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே பல இடங்களில் படப்பிடிப்பு நடந்த போது செட்டுகளை அடித்து நொறுக்கினார்கள்.
இப்போது டிசம்பர் ஒன்றாம் தேதி படம் வெளியாக சென்சார் போர்டு அனுமதி அளித்து விட்டது. விடமாட்டோம் ரஜ புத்திர அமைப்பான கர்னி சேனா மீண்டும் படத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரி மிரட்டுகிறார்கள். உச்சநீதி மன்றமும் தலையிட மறுத்து விட்டது.
இந்நிலையில் சேனா தலைவர் மகிபால் சிங் மக்ரானா நிருபர்களுக்கு பேட்டி அளித்து பன்சாலி க்கு துபாயில் இருந்து நிதி வந்துள்ளது. தீபிகா எங்களை அவமதிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். சூர்ப்பனகையின் மூக்கை துண்டித்தது போல அவரது மூக்கை துண்டிப்போம். சஞ்சய் லீலா பன்சாலி யின் தலையையும் துண்டிப்போம். துண்டிப்பவகளுக்கு ஐந்து கோடி சன்மானம் அளிப்போம் என்று பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.
கொடுமை என்னவென்றால் இதற்கு பல பாஜ க தலைவர்கள் ஆதரவு அளித்திருப்பதுதான் .
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே படம் தயாரிப்பவர்கள் யாருடைய உணர்வையும் புண் படுத்தக் கூடாது என்கிறார். பிறகு எதற்கு தணிக்கை குழு வைத்திருக்கிறீர்கள்.?
அவர்கள் அத்தனை பெரும் தகுதி இல்லாதவர்களா?
அதிலும் மேல்முறையீடு அமைப்பு இருக்கிறது. அதற்கு ஏன் இவர்கள் செல்லவில்லை?
சாதாரணமானவர்கள் ஆக இருந்தால் அப்படித்தான் சொல்வார்கள். சொல்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் சட்டம் கையையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறது.
தீபிகா படுகோனே வின் மூக்கு தப்புமா? சட்டம் இவர்களை விட பலம் வாய்ந்தது என்பதை நிரூபிப்பார்களா ?
நடப்பது மோடியின் இந்து அரசாயிற்றே ??!!
This website uses cookies.