நீட் தேர்வு எழுதும்போது தாலி அணியக் கூடாது என்று தடை விதிப்பது எதற்காக ?

neet exam
neet exam

நீட் தேர்வு என்பதே சூது மதியாளர்களின் தந்திரம்.      நடுத்தர மக்கள் உயர் நிலைக்கு வந்து  விடாமல்  எப்படியாவது தடுப்பதே நோக்கம்.

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வுமையங்களில் தங்கம் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப் பட்டதால் தாலியை கழற்றி விட்டு பெண் டாக்டர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

நீட் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் , ப்ளுடூத் , நோட்புக் ,பேனா ,கைப்பை  உள்ளிட்ட எதையும் எடுத்து வரக்கூடாது. கம்மல், வாட்ச், பிரேஸ்லெட் ,பெல்ட் அணிந்து வரக்கூடாது என்ற கட்டுப் பாடுகள் எதற்காக என்பது புரியவில்லை.

காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக என்றால் எதில் சாத்தியம் இருக்கிறதோ அதை தடை செய்தால் தவறில்லை. கம்மல், தாலி போன்றவற்றில் என்ன காப்பி அடிக்க சாத்தியம் இருக்கிறது. ?

தேர்வு எழுத வருபவர்களின் மனநிலையை தடுமாற செய்து அவர்களை நிலை குலைய வைக்க வேண்டும். அதனால் அவர்கள் மதிப்பெண்கள்  குறைவாக எடுக்க வேண்டும் என்ற திட்டம் அதில் இருப்பதாக சந்தேகம் வலுவடைகிறதே?

சென்ற ஆண்டு ஆட்சேபித்த போது  இனி தாலி அணிய தடை  இருக்காது  என்றவர்கள் இந்த ஆண்டும் மீண்டும் தடை விதிக்கிறார்கள் .

இப்படி அலைக்கழிக்கிறவர்களுக்கு என்ன தண்டணை?