நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடியில் பதிவாகும் ஒப்புகை வாக்கு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
நியாயமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பே இது சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். கால தாமதம் ஆகும் என்பதால் முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள்.
இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்களை ஆய்வு செய்து ஒரு தனியார் இணைய தளம் ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளது.
அதன்படி நாடு முழுதும் 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை பதிவான வாக்கு எண்ணிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக 8000 – 15000 வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன.
இது எப்படி சாத்தியம்?
எல்லா தொகுதிகளிலும் பாஜக லட்சக் கணக்கில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
சரத் பவார் கூறியது போல பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அதற்கு முன் நடந்த மூன்று சட்ட மன்ற தேர்தல்களில் பாஜக தோற்றதா என்று கேட்டிருக்கிறார்.
வித்தியாசம் இருந்தாலே எங்கோ திட்டமிட்டதில் தவறு நடந்திருக்கிறது என்று பொருள்.
தேர்தல் ஆணையம்தான் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக பெருவாரியான வெற்றி பெற்றிருக்கிறது என்ற கேள்வி எழலாம்.
அவர்களுக்கு தேவையான 303 இடங்களை தவிர வேறு எங்கும் என்ன நடந்தால் அவர்களுக்கு என்ன?
இருபது வாக்கு பதிவு இயந்திரங்களை காணவில்லை என்ற புகார் அப்படியே இருக்கிறது.
மொத்தத்தில் தேர்தல் ஆணையம் தான் தவறு நிகழவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதுவரை மக்களுக்கு இருக்கும் தேர்தல் முடிவுகளின் மீதான சந்தேக கறை அழியாது.
This website uses cookies.