உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டதே என்று தமிழக அரசு அவசர அவசரமாக சட்ட மன்ற கூட்டத்தின் கடைசி நாளன்று லோக் ஆயுக்தா சட்டத்தை இன்று நிறைவேற்றி உள்ளது.
அதில் உள்ள குறைகளை சட்ட மன்றத்தில் முழுவதுமாக விவாதிக்க வில்லை.
சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு என்னதான் வேலை. ?
ஒரு சட்டத்தை யாவது ஒழுங்காக விவாதிக்க தயாராக இல்லை என்றால் சட்ட மன்றம் எதற்கு?
வெற்றுச் சடங்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டால் உச்ச நீதி மன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற ஒன்றைத் தவிர நாம் இதில் மகிழ்ச்சி கொள்ள ஒன்றுமில்லை.
தேர்தல் முறைகேடுகள் , ஒப்பந்த முறைகேடுகள், நியமன முறைகேடுகள் இவற்றை விசாரிக்க சத்தத்தில் இடம் இல்லை. பெரும் ஊழல் நடப்பதே இவற்றில்தான்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு விடை தராமலே சட்டம் நிறைவேற்றப் பட்டு விட்டது.
ஏதோ ஒரு சட்டம் இருக்கிறது என்பதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?
தாங்கள் செய்ய இருக்கிற ஊழல்கள் இந்த சட்டத்தால் விசாரிக்க முடியாது என்று இந்த அரசு உறுதி செய்து இருக்கிறது.
நாட்டில் பல மாநிலங்களில் இந்த சட்டம் ஒரே மாதிரி இல்லை.
லோக்பால் சட்டத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள் இந்த சட்டத்தில் விடுபட்டிருக்கின்றன .
இதற்கும் உச்ச நீதி மன்றம் சென்றுதான் அவைகளை சேர்க்க வேண்டும் என்ற நிலை வருந்தத் தக்கது.
அரசு காட்டிய அவசரம் இவர்கள் ஊழல் வாதிகள் என்ற கருத்தை மக்களிடம் ஊன்றி விட்டது.
சட்ட மன்ற நடவடிக்கைகள் வெளிப்படையாக ஒளிபரப்பப் பட்டால்தான் இவர்களின் முகத்திரை கிழியும்.
தங்கள் பிரதிநிதிகள் எப்படி பணியாற்று கிறார்கள் என்று நேரடியாக பார்க்க மக்களுக்கு உள்ள உரிமை நிலை நாட்டப் பட்டாக வேண்டும்.
This website uses cookies.