இம்மாதம் நடக்க இருக்கும் நாகாலாந்து மாநில தேர்தலை புறக்கணிக்க அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து இருக்கின்றன.
அகண்ட நாகாலாந்து அமைப்பது நாகா இயக்கங்களின் நீண்ட கால கோரிக்கை.
பக்கத்து மாநிலங்கள் ஆன அசாம் , அருணாச்சல் பிரதேசம் மணிப்பூர் போன்ற வற்றில்இருந்து நாகா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்து மாநிலத்தில் இணைக்க வேண்டும் என்பதே கோரிக்கை.
ஏறத்தாழ மாநில பிரிவினையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் . அதற்கு மற்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா?
இதே கோரிக்கையை எல்லா மாநிலங்களும் எழுப்பினால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஆயுதம் ஏந்தி போராடியவர்களை பேச்சு வார்த்தைக்கு இழுக்க மோடி அரசு 2015 ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.
வேடிக்கை என்னவென்றால் அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பது வெளியில் சொல்லப் பட வில்லை.
இப்படி ரகசியமாக ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அது நிலைக்குமா? மற்ற மாநிலங்களிலும் இது போன்ற கோரிக்கைகள் எழலாம் என்பதே அச்சம்.
எதுவாக இருந்தாலும் பகிரங்கமாக விவாதித்து எடுக்கப் படும் முடிவுகளே நிலைக்கும்.
அசாம் மாநிலத்தின் தீமா ஹசாவோ பகுதி விரைவில் நாகாலந்துடன் இணைக்கப் படும் என்ற ஒரு ஆர் எஸ் எஸ் தலைவரின் பேச்சால் எழுந்த வன்முறையில் இருவர் உயிர் இழந்திருக்கி றார்கள். இது தேவையா?
சென்ற முறை அனைத்து கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்பு முடிவு செய்தபோது காங்கிரஸ் மட்டும் போட்டியிட்டு வென்று ஆட்சியை பிடித்தது. இப்போதும் அதே முறையை பா ஜ க வும் கடைபிடித்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யலாம். அப்படி செய்தால் மீண்டும் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பது மறுக்க முடியாது.
பா ஜ க அரசு செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல.
This website uses cookies.