இந்திய அரசியல்

ஹாஜி அலி தர்காவில் பெண்கள் மீண்டும் அனுமதி !! உச்சநீதி நீதி மன்றத்தில் தகவல்.

Share

மும்பையில் ஹாஜி அலி தர்கா மிகவும் பிரபலம்.   அங்கே 2012 லிருந்து பெண்கள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டது தர்கா நிர்வாகம்..

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை  உயர்நீதிமன்றம் இந்த தடையை விலக்கி உத்தரவிட்டது.  அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை இந்த தடை பறிக்கிறது என்பது உயர்நீதிமன்ற தீர்ப்பு.    பெண்கள் உரிமை மீட்புக்கான வெற்றியாக இது பார்க்கப்பட்டது.

இதை எதிர்த்து தர்கா டிரச்டு உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்தது.    அப்போது இரண்டு வார காலத்துக்கு மட்டும் தடை விதித்த நீதிபதிகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

யாரையும் அனுமதிப்பதில்லை என்பது வேறு.    ஆண்களை மட்டும் அனுமதிப்போம். பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்பது வேறு. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் இந்து கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையோடு ஒப்பிட்ட    நீதிபதிகள் இதுபற்றி விசாலமாக சிந்தித்து நல்ல முடிவை தெரிவிக்க அவகாசம் தந்தனர்.

முற்போக்கு சிந்தனை ஆன்மிக வாதிகளிடம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவம் சுட்டிகாட்டுகிறது.

அதைவிட கொடுமை என்னவென்றால் ஒரு ஆண் துறவியின் கல்லறைக்குப் பக்கத்தில் பெண்கள் செல்வது இஸ்லாத்தில் பாவம் என்ற ட்ரஸ்ட்டின் நிலைப்பாடுதான்.

முதலில் இஸ்லாம் தர்கா வழிபாட்டை அனுமதிக்கிறதா??!!

நம்பிக்கை உள்ள இந்துக்களும்தான் வழிபாட்டுக்கு வருகிறார்கள்.   அவர்களையும் தடுப்பீர்களா ?

பெண்கள் வழிபடத்தானே வருகிறார்கள்.   அவர்களை தடுப்பது நியாயமில்லை. வழிபட வரும் பெண்களுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதுதான் தர்கா நிர்வாகத்தின் கடமை.

இப்போது தர்கா நிர்வாகம் பெண்களுக்கு அனுமதி அளிக்க என்ன விதிமுறைகளை வகுக்கலாம் என்று திட்டமிட்டு வருவதாக தர்கா வக்கீல் கோபால் சுப்ரமணியன் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தார்.

எனவே தர்காவில் பெண்கள் அனுமதி மீண்டும் தரப்படும என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

அறிவு அரியணை ஏறட்டும்.

This website uses cookies.