தனியார் துறையில் உள்ளூர் வாசிகளுக்கே 75% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நாட்டிலேயே முதன் முறையாக சட்டம் இயற்றி ஜெகன்மோகன் ரெட்டி சாதனை புரிந்துள்ளார்.
தகுதி பெற்ற ஆட்கள் கிடைக்கவில்லை என்றெல்லாம் தப்பிக்க முடியாது. ஆந்திர அரசே அவர்களுக்கு தேவையான தகுதி பயிர்ச்சியை அளித்து வேலை கிடைக்க செய்துவிடும்.
மத்திய பிரதேச அரசு இதுபோல் ஒரு சட்டத்தை இயற்ற போவதாக அறிவித்து இருந்தது. அது 70% ஆக இருந்தது. இதே கோரிக்கை கர்நாடக குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் இருந்து வருகிறது.
ஆனால் ஜெகன் கொண்டு வந்துள்ள Andhra Pradesh Employment of Local Candidates in Industries/Factories Act, 2019 வித்தியாசமாக சிந்தித்து உள்ளூர் ஆட்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மாநில அரசு உதவி செய்யும் ஏற்பாட்டை செய்துள்ளது.
அத்துடன் அப்படிப்பட்ட வேலை வாய்ப்பை பெறுபவர்களுக்கு மாநில அரசு ஊக்கதுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவே படையெடுப்பு நடந்து வரும் நிலையில் ஆந்திர அரசின் வழியில் தமிழக அரசும் உள்ளூர் வாசிகளுக்கு தனியார் துறையில் 80% இடஒதுக்கீட்டை உறுதிசெய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பதே போதுமேடையின் எதிர்பார்ப்பு.