இஸ்ரோ சிவனின் அற்பத்தனம்; விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டார்களாம்?

isro-sivan
isro-sivan

ஒரு தமிழர் இஸ்ரோவின் தலைவராக இருப்பதில் நமக்கு எல்லாம் பெருமைதான். ஆனால் அவருக்குத்தான் தமிழர் என்ற உணர்வு இல்லை. அது போகட்டும்.

விக்ரம் லேண்டரை தரை இறக்குவதற்கு முன்பாக நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி மீ தொலைவில் இருந்தபோது இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் ஆன தொடபை இழந்ததால் அதனால் மெல்ல தரை இறங்க முடியாமல் போய்விட்டது. அது நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. அதை நாசாவும் இஸ்ரோவும் தேடி வந்தனர்.

ஒரு தமிழர் சென்னை என்ஜினியர் சண்முக சுப்பிரமணியன் என்பவர் அது மோதி விழுந்து கிடந்த இடத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவில் கிடந்ததை கண்டுபிடித்து நாசாவுக்கு தெரியப்படுத்தினார்.

நாசாவும் அதை உறுதிபடுத்தி அவருக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் நாங்கள் விக்ரம் லேண்டரை விழுந்த இடத்தில் கண்டுபிடித்து நாங்கள் ஏற்கெனெவே எங்கள் இணையதளத்தில் அறிவித்து இருக்கிறோம் என்றார்.

ஆனால் சுப்பிரமணியம் அனுப்பிய தகவலுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை என்று கேட்ட போது நாங்கள் கண்டிபிடித்து விட்ட பிறகு மற்றவர்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்றுபதில் சொன்னார்.

நாம் கேட்கிற கேள்வி; நாசா சுப்பிரமணியனுக்கு வாழ்த்து சொல்லும்போது அவர்களுக்கு இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்ட விபரம் தெரியுமா தெரியாதா?
அவர்களுக்கு இருக்கிற பெருந்தன்மை ஏன் உங்களுக்கு இல்லை?

பரிசீலிக்கும் போது ‘விகரம் லேண்டர் விழுந்து கிடந்த இடத்தை சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கண்டு பிடித்து உள்ளது. ஆனால் அதனுடன் இன்னும் தகவல் தொடபு ஏற்படுத்த முடியவில்லை. அந்த லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த சாத்தியமாகக் கூடிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.” என்றுதான் சொல்லப் பட்டிருக்கிறது.

சிவன் அவர்களே கொஞ்சம் பெரிய மனதுடன் நடந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.