சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பாதியாக குறைந்தும் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கின்றன.
அதாவது ஒரு பீப்பாய் 52.39 டாலராக இருந்த விலை 33.38 டாலராக குறைந்த போதும் தினந்தோறும் விலை நிர்ணயிக்கும் எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்க மறுக்கின்றன. காரணம் மத்திய மாநில அரசுகள் இந்த விலை குறைவின் காரணமாக கிடைக்கும் லாபத்தை கலால் வரியை உயர்த்தி அடைய நினைப்பதுதான்.
யாரை குற்றம் சொல்வது? கலால் வரியை உயர்த்திய மத்திய அரசையா? எண்ணை நிறுவனங்களையா?
இந்த விலை குறைவு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாது.
தினந்தோறும் விலையை உயர்த்தும்போது தினந்தோறும் விலையை குறைப்பதில் என்ன சிரமம்?
பொதுமக்கள் அதிக விலைக்கு பழகி விட்டார்கள். ஏன் அவர்களுக்கு விலையை குறைக்க வேண்டும்?
இந்த சிந்தனை பொது மக்கள் மீது அரசுக்கு இருக்கும் அலட்சியத்தை காட்டுகிறது.
அரசின் மீது மக்களுக்கு எழும் வெறுப்பு அதிகமாவதை பொருட்படுத்தவில்லை என்றால் மக்களும் உங்களை பொருட் படுத்தப் போவதில்லை. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை வெகுநாள் நீடிக்காது.
This website uses cookies.