உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஓடியா, வங்காளம், இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவித்தது.
அதில் தமிழ் விடுபட்டுப்போக பிரச்னை ஆனது. தொடக்கத்திலேயே எல்லா மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தால் பிரச்னை எழுந்திருக்காது.
பிரச்னை எழுந்தபிறகு இப்போது தமிழில் முக்கிய தீர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.
இதை முன்பே செய்திருந்தால் என்ன அல்லது அறிவிப்பு மட்டுமாவது செய்திருந்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
மொழிப் பிரச்னைக்கு தீர்வு மொழி மாற்றமே?!
மொழிபெயர்ப்பு செய்துவிட்டால் யார் என்ன மொழியில் பேசினாலும் பிரச்னை இல்லை.
பாராளுமன்றத்தில் தமிழில் பேசினால் உடனே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொடுத்து விடுகிறார்கள். எனவே யார் எந்த மொழியில் பேசினாலும் மற்றவர்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டாலும் உடனே புரிந்து கொள்ள முடிகிறது.
மொழிபெயர்ப்பை தீர்வாக ஏற்றுக் கொண்டால் நீ மூன்று மொழி படி என்று சொல்ல வேண்டிய அவசியமே எழாதே ?