பல்லாவரத்தில் உள்ள சாவடி தெருவில் சைவத் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் நினைவில்லம் அமைந்திருக்கிறது.
இதன் ஒரு பகுதியில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. அதற்குத்தான் மக்கள் வருகிறார்கள்.
நினைவில்லத்திற்கு யாரும் வருவதில்லை.
இதனை தென்னிந்திய தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு பராமரித்து வருகிறதாம்.
ஏன் இதை அரசு பராமரிக்கக் கூடாது?
செடி கொடிகளுக்கு இடையே பாழ் அடைந்து கிடக்கும் அந்த கட்டிடம் ஒரு நினைவு இல்லம் என்பதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
மறைமலை அடிகளின் நூல்களை அங்கே மக்கள் பயன்பாட்டுக்கும் கொடுத்து பாதுகாக்கவும் செய்யலாம். ஒரு நூலகம் வைத்தால் கூட மக்கள் வருவார்கள்.
நினைவில்லம் அமைப்பது ஒருவரை பெருமைப்படுத்தத்தான்.
அதுவும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகள் நினைவில்லம் வரும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்க சக்தியாக விளங்க வேண்டும். பல மறைமலைகள் தோன்ற அது வழி வகுக்க வேண்டும். அதுதான் நினைவில்லத்தின் நோக்கம்.
இப்படி பாழடைய விடுவது அவரை அவமதிப்பது ஆகும்.
தமிழக அரசு உடனே தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.
This website uses cookies.