கொடுமை; உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி?

hindi-imposition
hindi-imposition

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம் பில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்திமொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்து ஆறு லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து இருக்கிறார்.

இந்த ஒரு வருட பயிற்சியை சென்னையில் இயங்கி வரும் இந்தி பிரச்சார சபா மூலமா நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப் படுகிறதாம் .

தமிழ்க்கல்வியில் உயராய்வினை வலுப்படுத்துதல் தமிழ், தமிழர் இலக்கியம்,  வரலாறு, கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் என்று துறை தோறும் தமிழாய்வினை மேம்படுத்த வேண்டிய துறை ஏன் இந்தியை  கற்பிக்க வேண்டும்?

தமிழை தாய் மொழியாக கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் நோக்கம் என்று சொல்கிறார்கள்.

இதை பயன்படுத்தி இந்தி பிரசார சபா செய்யும் காரியத்தை தமிழ் ஆராய்ச்சி நிறுவனமே செய்ய வைத்து விட்டார்கள்.

அவர்கள் ஏமாற்றுவார்கள். நாம் ஏன் ஏமாற வேண்டும் என்பதே கேள்வி?