இந்தியே இந்தியாவின் மொழி என்று அமித் ஷா பேசிய பேச்சு ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில் அவருக்கு ஆதரவாக ரஜினி கொடுத்திருக்கும் குரல் எதிர்காலத்தில் அவர் யார் பக்கம் நிற்பார் என்பதற்கு அடையாளம் காட்டி நிற்கிறது.
‘பொதுவான மொழி ஒன்று இருந்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது.’
‘துரதிருஷ்ட வசமாக இந்தியை தென்னாட்டிலும் ஏன் வடநாட்டிலும் கூட பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘
இதுதான் இன்று ரஜினி உதிர்த்த முத்துக்கள்.
அதாவது பொதுவான மொழி ஒன்று இருந்தால் நாட்டுக்கு நல்லதாம்.
ஏன் பொதுவான மொழி ஒன்று வேண்டும்?
இப்போது ஆங்கிலம் அல்லது இந்தி என்று இருக்கிறது.
ஆங்கிலம் அயல்நாட்டு மொழி. அயல்நாட்டு மொழிக்கு நம் நாட்டு மொழி இந்தி இருந்தால் என்ன? இதுதான் இந்தி வெறியர்கள் கேட்கும் கேள்வி.
நம் கேள்வி அவர்கள் காதில் விழுவதில்லை.
எனக்கு இந்தியும் வங்காளியும் மராத்தியும் கன்னடமும் ஆங்கிலமும் அயல்மொழிகள்தான். ஒரே வேறுபாடு ஆங்கிலம் அந்நிய நாட்டு அயல் மொழி. மற்ற மொழிகள் என் நாட்டு அயல்மொழிகள்.
பொதுமொழியாக தமிழாக இருந்தால் தமிழன் எதிர்க்க மாட்டான். அப்படித்தான் ஒவ்வொரு மொழிக்காரனும் தன் மொழியே பொதுவான மொழியாக இருக்க ஆசைப்படலாம். என்ன தவறு?
இந்திக்காரன் தன் தாய் மொழியை மட்டும் படித்துக் கொண்டு கோலோச்சுவான் ! வெளிநாட்டு தொடர்புக்கு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மன் ஏதாவது கற்றுக் கொள்வான். பறந்து செல்வான்.
மற்ற மொழிக்காரன் மட்டும் தன் தாய் மொழியோடு ஆங்கிலத்தையும் இந்தியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மொழி கற்றுக் கொள்ளும் பளு எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டுமா வேண்டாமா?
இந்த நியாயத்தை எதிர்கொள்ள முடியாமல்தான் இந்திக்காரன் மும்மொழி என்று பசப்புகிறான்.
எந்த வடநாட்டுக்காரனும் எந்த தென்னிந்திய மொழியையும் கற்றுக் கொள்ளப்போவதில்லை.
இப்போதே மோசடி செய்து தமிழ் கற்றுக் கொண்டதுபோல் போலியாக ஆவணங்கள் தயார் செய்து தமிழர் வேலை வாய்ப்பை பறித்துக் கொள்கிறான்.
இந்தியை ஏற்றுகொள்ளாதது துரதிருஷ்டம் என்கிறார் ரஜினி. அதாவது ஏற்றுக் கொண்டால் அதிருஷ்டம் என்றுதானே அர்த்தம்.
எந்த மொழியையும் யாரும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். இதில் ஏன் கட்டாயம்? கட்டாயப்படுத்துவது புகுத்துவது மத்திய அரசு. புகுத்த மாட்டோம் என்று சொல்லிகொண்டே புகுத்துகிறவர்களை எப்படி எதிர் கொள்வது? இதுதான் பிரச்னை!
நல்லவேளை ரஜினி தன்னை அடிக்கடி தன்னை யார் பக்கம் என்று அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறார்.
ரசிகன் என்று ஒட்டிக கொண்டிருக்கும் தமிழர்கள் விழித்துக் கொள்ளட்டும்.
மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குரல் கொடுத்திருக்கிறார் இன்று. இந்திக்கு வால் பிடித்திருக்கிறார் ரஜினி இன்று.
ரஜினியை ரசிப்போம். அரசியலில் வாலாட்ட முயற்சித்தால் ஓட்ட நறுக்குவோம்?!
தமிழ்-தமிழர்க்கு எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். ??!!
This website uses cookies.