Connect with us

மன்னிப்பு போதாது துல்கர் சல்மான், நீக்கு வசனத்தை?

dulquer-salmaan

மொழி

மன்னிப்பு போதாது துல்கர் சல்மான், நீக்கு வசனத்தை?

வரனே அவஷ்யமுண்ட் என்ற மலயாள திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அதில் சுரேஷ் கோபி தோன்றும் ஒரு காட்சியில் அவர் தனது நாயை பிரபாகரன் என்று  கூப்பிடும் வசனம் அமைந்துள்ளது.

அதற்கு சிறப்பு விளம்பரம் கொடுத்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைப் புலிகளை சீண்டிப் பார்க்கும் காட்சி அது .

இயக்குனர் அனுப் அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும்?

முன்பு வந்த பட்டின பிரவேசம் என்ற படத்தில் இடம் பெற்ற காமெடி என்று இப்போது துல்கர் சல்மான் விளக்கம் கூறி மன்னிப்பும் கோரியுள்ளார்.

கேட்டவுடனேயே டேய் நாயுன்ட மோனே என்று சொல்லத் தூண்டும் வகையில் அமைந்த ஆத்திரமூட்டும் காட்சி அது என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் மன்னிப்பு கேட்ட பிறகு அதை பெரிது படுத்துவது அழகல்ல. நல்லதும் அல்ல. ஆனால் இந்த கேடு கெட்ட காரியத்தை செய்யத் துணிந்தது யார் என்பது தெரிய  வேண்டும்.

சுரேஷ் கோபி பாஜக வை சேர்ந்தவர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள். அவர் இந்த வசனத்தை பேசுவது போல் காட்சி அமைத்தால் அதில் உள்நோக்கம்  இருக்குமோ  என்று எண்ணத் தோன்றுவது இயல்புதானே?

துல்கர் சல்மான் வளர்ந்து  வரும் நல்ல நடிகர். எதிரிகள் இல்லாதவர். இப்படி சர்ச்சைகளில்  யாரோ சிக்க வைத்திருக்கிறார்கள். அவர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வருத்தம் தெரிவித்தால் போதுமா? சர்ச்சைக்குரிய  வசனத்தை  நீக்குவதில் என்ன சிரமம்?

இயலா நிலை என்றால் விட்டு விடலாம். இயலும் என்றால் நீக்குவதே முறை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மொழி

To Top