தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி ரூபாய் 29 கோடி.
ஆனால் அதே கால கட்டத்தில் சமஸ்கிரிததுக்கு ஒதுக்கியதோ 643 கோடி.. அதாவது 22 மடங்கு அதிகம்.
அப்படியென்றால் இது யாருடைய அரசு?
பார்ப்பனர்கள் அல்லாதோர் யாராவது சமஸ்கிருதம் பேசுகிறார்களா?
அப்படியானால் இது அவர்களின் அரசுதானே?
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதும் புதிதாக நியமிக்கப் பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாக இருப்பதும் அந்த நிறுவனத்தை மெல்ல மெல்ல சிதைந்து போக செய்யும் சூழ்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?
வடமாநிலங்களில் இந்தி ஆங்கிலம் உருது என்று மூன்று மொழிகளில் ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் இருக்கும். அதை உருதுவுக்கு பதிலாக இப்போது சமஸ்கிருதத்தை புகுத்தி இருக்கிறார்களாம்.
அவர்கள் அரசு. எது வேண்டுமானாலும் செய்து கொள்வார்கள். செய்து கொள்ளட்டும்.
ஆனால் நமது உரிமைகளை பறிக்காமல் இருந்தால் சரி.
அதற்கும் கண் காணிக்க ஒரு அரசு இருந்தால்தான் அதுவும் முடியும்.
கண்டுகொள்ளாமல் இருக்க ஏன் ஒரு அரசு?