யோகக் கலை இந்தியாவில் தோன்றி உலக நாடுகளில் வளர்ந்திருக்கிற , உடலையும் மனதையும் பக்குவப் படுத்தும் கலை .
பிரதமர் மோடி ஐ.நாவில் பேசி அந்த அவையும் ஒப்புக் கொண்டு ஜூன் 21 ம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்து இருப்பது நமக்கு பெருமை அளிக்கும் ஒன்றுதான். இதில் 47 முஸ்லிம் நாடுகளும் அடக்கம்.
மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் மதம் கடவுள் சம்பத்தப் தட்டது அல்ல.
இதனால் ஏதோ பா.ஜ.க வளர்ந்து விடும் என்ற பயம் தேவை இல்லை.
அமெரிக்காவில் இது ஆன்மிகம் மட்டுமல்ல. பல லட்சம் டாலர் சம்பத்தப் பட்ட வணிகமும் ஆகும்.
கம்யுனிஸ்டுகளும் நாத்திகர்களும் இதை கண் மூடித் தனமாக எதிர்ப்பது தேவை அற்றது.
யாராவது இதை அரசியல் ஆக்க முனைந்தால் தோல்வி உறுதி.