ஜெயலலிதா ரூ 2.22 கோடி சொத்து குவித்தது உண்மை ! எனவே விடுதலை?!!! நீதியரசர் குமாரசாமியின் தாறுமாறு தீர்ப்பு!!!!!

             எந்த தீர்ப்பாக இருந்தாலும் சட்டத்துக்கும் சாட்சியத்திற்கும் முரணாக இருப்பதாக சொல்லித்தான் மேன்முறையிடுகள் செய்யப் படுகின்றன.   
             குன்ஹா கொடுத்த தீர்ப்பில் என்னென்ன தவறுகள் இருப்பதாக குமாரசாமி கண்டு பிடித்து அவர் கொடுத்த தண்டனையை இவர் ரத்து செய்தார் என்பதை அப்புறம் பார்க்கலாம். 
             இவர் கொடுத்த தீர்ப்பிலேயே ஜெயலலிதா வாங்கிய கடன் கூட்டு தொகை  24.17  கோடி அல்ல 10.67  கோடிதான் என்றால் அதிக சொத்து 2.22  கோடிக்கான  8.12  சதவிகிதம்  அல்ல என்றும் அது  16.32 கோடிக்கான  76.32 சதவிகிதம் என்றும் ஆகிறதே அப்படி என்றால் அது காலாவதியாகிப்போன 1976 தீர்ப்பின் படியே கூட  தண்டனைக்குரிய குற்றம் ஆகிறதே இப்போது இந்த தவறி யார் சரி செய்வது. ? 
             ஒரு தவறை தெரிந்தே செய்து அது சரி செய்யப் படும் வரை பதவியில் இருந்து கொண்டு  அந்த தவறையும்  சரியாக்கி விட முயற்சி மேற்கொள்ள கொடுக்கப் பட்ட வாய்ப்பாக  ஜெயலலிதா  இந்த தீர்ப்பை பயன் படுத்தலாம். 
             தீர்ப்பை  தவறாக எழுதலாம்.  ஆனால் விமர்சிக்க முயன்றால் மிரட்டப் படும் சூழ்நிலை தமிழ் நாட்டில் நிலவுவது நல்லது அல்ல. 
              தப்பை சரியாக செய்தால் தப்பே இல்லை என்று ஒரு திரைப்பாடல் சமீபத்தில் வந்தது.   இவர்கள் தப்பையும் தப்பு தப்பாக செய்து விட்டு எல்லோரும் அதை சரி சரி என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களே ? 
               இவர்கள் கையில் தமிழகம் நீடித்தால் எதிர்காலம் என்ன ஆகும்?