28.7 லட்சம் மக்கள் இந்தியாவில் மதமற்றோர்!! கணக்கெடுப்பில் தகவல். ! முறையாக கணக்கெடுத்தால் எண்ணிக்கை உயரும்!!??
Share
இந்தியாவில் 28.7 லட்சம் மக்களும் தமிழ் நாட்டில் 1 லட்சம் மக்களும் தாங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் நாத்திகர்கள் , பகுத்தறிவாளர்கள், மற்றும் எந்த குறிப்பிட்ட மதத்தையும் சாராத ஏதோ ஒரு அடையாளம் தெரியாத சக்தியை நம்புபவர்களாக இருக்கிறார்கள்.
உ.பி யில் ஆறு லட்சம் பேரும் பீகார் மே.வங்கம் , ஆந்திர , தெலங்கானா கர்நாடகா தமிழ் நாட்டிலும் தலா ஒரு லட்சம் பேர் மதமற்றவர்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில்தான் பெரியார் 1879 -1973 ல் சுமரியாதை பிரசாரம் செய்தார் என்றால் மற்ற மாநிலங்களில் யார் செய்தார்கள். ?
சரியான முறையில் பதிவு செய்தால் இந்த எண்ணிக்கை உயரும்.
WIN – Gallup – 2012 லிருந்து செய்த பதிவில் இந்தியாவில் 3% மக்கள் நாத்திகர்களாகவும் 3% எதுவும் சொல்ல விரும்பாமலும் இருகிறார்கள். 81 % இந்தியர்கள் மத நம்பிக்கை
உள்ளவர்களாகவும் 13 % இந்தியர்கள் எந்த மதத்தையும் சேராதவர் களாகவும் இருக் கிறார்கள்.
மதமற்ற ஆனால் இறை நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக மதச்சன்டைகள் ஒழியும் போட்டிகள் மறையும் நாடு நலம்பெரும் !!!!