Latest News

முதல்வர் எடப்பாடி பழிநிசாமி அரசின் முதல் ஐந்து அறிவிப்புகள் !

Share

எடப்பாடி பழனிசாமி பதிவிஏற்று முதல் முறையாக ஐந்து அறிவுப்புகளை வெளியிட்டு ஆணைகளை பிறப்பித்துள்ளார்.

ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஆண்டொன்றிற்கு ஐம்பது சதம் மானியம் அல்லது இருபதாயிரம் ரூபாய் இரு சக்கர வாகனம் வாங்க வழங்கப்படும்.  செலவு இருநூறு கோடி.

ஆண்டொன்றிற்கு ஆறு லட்சம் தாய்மார்கள் பயனடையும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பனிரெண்டாயிரத்திலிருந்து பதிநெட்டாயிரமாக உயர்வு.   செலவு 360 கோடி.

மீனவர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் செலவில் ஐந்தாயிரம் வீடுகள்.  செலவு  85 கோடி.

வேலை வாய்ப்பற்று இருக்கும் இளைஞர் களுக்கு மாதந்திர உதவித்தொகை உயர்வு.  இது தற்போது

55228 பேருக்கு வழங்கப் பட்டு வருகிறது. செலவு 31  கோடி .

மதுவிலக்கை அமுல்படுத்தும் நோக்கில் மேலும் ஐநூறு மதுக்கடைகள் மூடல்.

இன்று அறிவிக்கப் பட்ட திட்டங்களின் மூலம் அரசிற்கு மேலும் 676 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகும்.

ஏற்கனெவே  நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

வரவேற்கத் திட்டங்கள் என்றாலும் திணறிக் கொண்டிருக்கும் அரசாகவே எடப்பாடியின் அரசு மதிக்கப் படுகிறது.

சட்ட மன்ற உறுப்பினர்கள் விடுதியில் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.   ஏன் அவர்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க தயங்குகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

கொரடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய தயக்கம் காட்டுகிற அரசு பலவீனமான அரசாகவே கருதப் படும்.     செய்தால் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.   இப்போது வெறும் ஆறு வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று ஆட்சி செய்து வரும் இந்த அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தொடர்ந்து எத்தனை பேர் ஆதரவை நீட்டிப்பார்கள்?    இடையில் எத்தனை பேர் அணி மாறுவார்கள்? உறுதியான கொள்கை முடிவுகளை இந்த அரசால் எடுக்க  முடியுமா?

முதல்வர் பழனிசாமி முதல் கையெழுத்தை இட்டு விட்டு நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.

முதல்வர் தன் தகுதியை நிரூபிக்க வேண்டும்.      எந்த பிரச்னை என்றாலும் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றி விளக்கமாக கூற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அமைச்சரவை கூட்டுப் பொறுப்பில் இயங்குகிறதா?   சிறையில் இருக்கும் சசிகலாவின் இயக்கத்தில்  இயங்குகிறதா என்ற கேள்வியை புறந்தள்ளி  விட முடியாது.

வரும் நாட்கள் தமிழர்களுக்கு சோதனை  நாட்களே.     ஏனெனில்  தன் முயற்சியில் தோல்வியடைந்த மோடி அரசு இவர்களை நிம்மதியாக ஆள விடும் என்று தோன்றவில்லை.

 

This website uses cookies.