Latest News

கடன் தள்ளுபடியும் நியாய விலையும் கேட்ட 5 விவசாயிகள் சுட்டுக் கொலை??!! பா ஜ க அரசின் பரிசு!!

Share

” கூலி  உயர்வு கேட்டான்  அத்தான் – குண்டடி பட்டு செத்தான் அத்தான் ” என்று அந்தக் காலத்தில் கலைஞர்  எழுப்பிய திராவிட இயக்க வாசகம் இன்றும் பொருந்துகிறதே !

ம பி மாநில மாண்ட்சார் மாவட்டத்தில் விவசாய  விளைபொருள் களுக்கு லாப விலையும் கடன் தள்ளுபடியும் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.    எந்த அரசியல் சார்பும் இல்லாத போராட்டம்.

அதை சாதுர்யமாக கையாள தெரியாத பா ஜ க அரசு கண்மூடித் தனமாக சுட்டதில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டு நூற்றுக் கணக்கானவர் காயமடைந்து தீவைப்பு கொள்ளை வன்முறை என்று கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அரசியல் தலைவர்கள் வருகைக்கு தடை போட்டும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் அளித்தும்  நிலைமையை சமாளிக்க சிவராஜ் சிங் அரசு முயற்சிக்கிறது.

உற்பத்தி செலவுக்கு மேல் லாப விலை நிர்ணயித்தால் எந்த விவசாயியும் நட்ட மடைய வாய்ப்பே இல்லை.

உ பி யில் முப்பத்தி ஆறாயிரம் கோடி நிவாரணம் அளித்துள்ள நிலையில் ம பி யிலும் அதே போன்ற அணுகு முறையை விவசாயிகள் எதிபார்த்திருக்கலாம் .

நாடு தழுவிய அளவில் மாநிலங்கள் தோறும விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

விளைபொருளுக்கு  லாப விலையும் அர்த்தமுள்ள காப்பீட்டு திட்டமும் மட்டுமே  விவசாயிகளை காப்பாற்றும் என்ற உணர்வு மத்திய மாநில அரசுகளுக்கு  வரும் நாளே பொன்னாள்!

என்று வரும் அந்நாள் ?

This website uses cookies.