பீர் ஆரோக்கிய பானம் என்று பேசியதோடு நில்லாமல் அதன் 13 அரிய பலன்களை மறுநாள் வாட்ஸ் அப்பில் தொலைகாட்சிக்கு அனுப்பிய ஆந்திர அமைச்சர் கே எஸ் ஜவகர் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார்.
அமைச்சர் அறியாமையில் பேசியிருக்கிறார் என்று கலால் துறை அதிகாரிகளே பேசும் அளவு அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது.
ஆந்திராவில் இப்போது மதுவிற்கு எதிரான போராட்டத்தை பெண்கள் முன்னெடுத் திருக்கிறார்கள் .
தமிழகத்தில் தொடங்கிய போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளது நல்லதே!
ஆனால் எப்படிப்பட்ட அமைச்சர்களை மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
சந்திரபாபு நாயுடு என்ன செய்ய போகிறார்?
This website uses cookies.