பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டி விக்கு பணம் சம்பாதிக்கும் ஒரு வழிமுறை.
பதினைந்து பிரபலங்களின் தனிப்பட்ட ஆசாபாசங்களை விளம்பரப் படுத்தி வணிகப் படுத்தும் மட்டமான காரியம்.
கலந்து கொள்ளும் அனைவரும் மோசமாகவும் ஆபாசமாகவும் உடை அணிந்து வருவது திட்டமிட்ட வசூல் நோக்கம்.
பல நாடுகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வெற்றி கண்டிருக்கலாம்.
இதைவிட மோசமான நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதனாலேயே நடத்தலாமா?
மேல்தட்டு மக்களின் ஆதிக்க உணர்வுகள் காட்சிப் படுத்தப் படுகின்றன.
ஒரு பிராமணப் பெண் காயத்திரி ‘ சேரி நடத்தை’ என்று தாழ்த்தப் பட்டோரை தாழ்த்தி பேசுவதை கண்டித்து பெரியார் திராவிட கழகம் அறிக்கை வெளியிட்டது. இந்து மக்கள் கட்சி இந்து கலாச்சாரத்தை கேவலப் படுத்து வதாக புகார் கூறி இருக்கிறது. கமலகாசன் கருப்பு சட்டை போடுவது கூட கேள்வி க்கு ஆளாகி யிருக்கிறது.
இதனால் சமுதாயத்துக்கு என்ன பயன். ?
சினிமா என்றால் கூட ஒரு இரண்டரை மணி நேரம் பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ளலாம்.
நூறு நாட்கள் தினமும் ஒன்றரை மணி நேரம் தமிழ் மக்கள் இந்த கன்னறாவிக் காட்சிகளை பார்த்து கொண்டிருக்க வேண்டுமா?
பார்க்காதே என்றால் என்னதான் இருக்கிறது என்று பார்க்க மக்கள் கூடுவது இயல்பு என்பதுதான் இவர்களுக்கு பலம் லாபம்.
மக்கள் தெளிவடைந்து இருந்தால் பார்க்காமல் ஒதுக்கி வைத்தால் அவர்கள் வேறு நிகழ்ச்சிகளை பற்றி சிந்திப்பார்கள். மாறாக பார்பவர்கள் அதிகமாக அதிகமாக இது போன்ற மக்களை கெடுக்கும் நிகழ்ச்சிகள் பெருகத் தான் செய்யும்.
This website uses cookies.