கட்சித் தாவலில் சாதனையே படைத்து விட்டது அருணாச்சல பிரதேசம்.
முதலில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது 42 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் . அத்தனை பேரும் விலகி அருணாச்சல மக்கள் கட்சியில் சேர்ந்து பேமா கண்டு என்பவர் தலைமையில் ஆட்சியை அமைத்தார்கள்.
அந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தது. அருணாச்சல மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சி தகம் பாரியோ என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்ததும் பா ஜ க திட்டமிட்டு தற்போதைய முதல்வர் பேமா கண்டுவை தன் பக்கம் இழுத்து அவருடன் 33 உறுப்பினர்களையும் பா ஜ க வில் சேர்த்துக் கொண்டு இப்போது பா ஜ க அரசாக மாறி விட்டது.
வட கிழக்கு மாநிலங்கள் எழில் இப்போது பா ஜ க அசாமிலும் அருணாச்சல பிரதேசத்திலும் ஆட்சியில் நேரடியாக இருக்கிறது. நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது.
தங்கள் உறுப்பினர்களை பா ஜ க கடத்தி சென்று விட்டதாக அருணாச்சல மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
2019 தேர்தலில் தங்களது நேரிடையான ஆட்சியை நிலை நாட்ட பாடுபட போவதாகவும் அறிவித்துள்ளது.
அரசியலில் நேர்மை என்று தம்பட்டம் அடிக்கும் பா ஜ க கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியைப் பிடித்தது அதன் நம்பகத் தன்மையை குறைக்கவே செய்யும்.