ஒருவழியாக இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு முறையில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற ஆலோசனை கூறியிருக்கிறது. நிர்மலா சீதாராமன் கூறியதை விஜய பாஸ்கர் நன்றி கூறி வரவேற்றி ருக்கிறார்.
உச்சநீதிமன்றம் வரை சென்று முடியாததை ஓராண்டுக்கு அவசர சட்டம் மூலம் நடத்த முயல்கிறார்கள்.
ஓராண்டு விலக்கு போதாது. நிரந்தர விலக்கு வேண்டும்.
நெருக்கடி நிலை காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி உரிமையை பறித்தார்கள்.
கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு வந்தால் மட்டும்தான் நம் உரிமை பாதுகாக்கப் படும்.
நீதிமன்றங்களும் கடமை தவறு கின்றன. ஏன் வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்கள் என்று கேள்வி கேட்கும் நீதி மன்றம் ஏன் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் இல்லாத பொது ஒரே தேர்வு முறை என்று கேட்கவில்லை.
மாநில பாட திட்டம் இருப்பது தவறா? அது சி பி எஸ் சி பாடத் திட்டம் போலவே இருக்க வேண்டும் என்று மறைமுகமாக நிர்பந்திப்பது எப்படி நியாய மாகும். ?
பாடத் திட்டத்தை பல ஆண்டுகளாக மாற்றாதது மாநில அரசின் தவறாக இருக்கலாம்,.
அதற்கு மாணவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?
மாநில பாட திட்ட மாணவனுக்கு அளிக்கப் பட்ட 85% இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதி மன்றம் சென்றது ஒரு சி பி எஸ் சி மாணவன். ஆக மாணவர்களிலேயே ஒரு பகுதியினர் தாங்கள் செல்வாக்குள்ள வர்கள் என்பதை நிருபித்து வருகிறார்கள்.
விலக்கு அளித்து தமிழக சட்ட மன்றம் இயற்றிய சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியதாக சொன்னார்களே அது என்ன ஆயிற்று? அனுப்பினார்களா? அனுப்பவே இல்லையா? சட்டம் செல்லுமா செல்லாதா என்று நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டாமா? இந்த அணுகுமுறைக்கு என்ன பெயர் சூட்டுவது?
வஞ்சகமும் சூழ்ச்சியும் நாடாளுகின்றன. அடிமைப்பட்டோர் மீண்டு எழாத வாறு மீண்டும் மீண்டும் அடிக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் இடத்தை இப்போது இந்திக்காரர்கள் பிடித்திருக்கிறார்கள் .
This website uses cookies.