பொதுத் தேர்தல் நடைபெறும் உ பி யில் முஸ்லிகள் சராசரியாக இருபது சதம் இருக்கிறார்கள்.
மொத்த இடங்கள் 403. சென்ற பாராளுமன்ற தேர்தலில் எண்பது இடங்களில் எழுபத்து மூன்று இடங்களை வென்று பா ஜ க வரலாறு படைத்தது. வரலாறு வென்றதில் மட்டுமல்ல. ஒரு இடத்தில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை அது நிறுத்தவில்லை.
அந்த அனுபவம் சட்ட மன்ற தேர்தலிலும் வெளிப்படுகிறது.
முஸ்லிம் வேட்பாளர் இல்லாமலேயே சட்ட மன்ற தேர்தலிலும் வென்று விட முடியும் என்று அது நம்புகிறது .
இந்துக்கள் வாக்குகளை மட்டுமே குறி வைக்கும் பா ஜ க முஸ்லிம் வேட்பாளர்கள் வேண்டாம் என்று ஒதுக்குவதன் மூலம் ஒரு செய்தியை உரக்க சொல்கிறது.
முஸ்லிம்கள் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு வகிக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்து கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
இப்படி மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி நிரந்தரமாக ஒரு செயற்கைப் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் ஒன்று சேரவே முடியாத நிலையை பா ஜ க உறுதிப்படுத்துகிறது.
இத்தகைய செயற்கைப் பிளவுகள் தான் எதிர்காலத்தில் பிரிவினை க் குரலுக்கு வித்திடும் என்பதை மறந்து விடக் கூடாது.
நிரந்தரமாக ஒரு பிரிவினரை அடக்கி ஆண்டு விட முடியாது.
மாயாவதியின் பி எஸ் பி யும் அகிலேஷின் சமாஜ்வாதியும் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு இடங்கள் வழங்கி இருக்கிறார்கள்.
ஒரு பா ஜ க தலைவர் இது தொடர்பாக கூறும்போது ” தகுந்த வேட்பாளர் கிடைக்காத தால்தான் நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வில்லை” என்று சமாதானம் கூறுகிறார்.
ஏற்கத் தக்கதா இந்த விளக்கம். மக்களிடயே பிளவு மனப் பான்மையை திட்டமிட்டு வளர்க்கும் பா ஜ க தான் இந்திய ஒற்றுமைக்கு மிகப் பெரிய ஆபத்து.
This website uses cookies.