சிவாஜி சிலை விவகாரம் – கருணாநிதி வைத்த சிலையை அகற்றி ,ஈடாக மணிமண்டபம் அறிவித்து ஜெயலலிதா செய்த அரசியல்???!!!

Share
                       2002 ல்  நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட  12  கிரவுண்ட் நிலம் அடையாரில் ஒதுக்கினர் ஜெயலலிதா.
                         நடிகர் சங்கம் அதில் மண்டபம் கட்டவில்லை. 2006 ல் கருணாநிதி கடற்கரையில் சிலை வைத்தார்.  அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது.  அரசு அப்போது சிலை இருக்கும் இடம் ஒரு போக்குவரத்து தீவு , ”  traffic island ” எனவே போக்குவரத்துக்கு பாதிப்பில்லை  என்று எதிருரை தாக்கல் செய்தது.

                         2011 ல் ஆட்சி மாற்றம் வந்ததும் கருணாநிதி செய்த அனைத்தையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் சிலை விவகாரத்திலும் அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ‘  ஆமாம் சிலை இருப்பது போக்குவரத்துக்கு இடைஞ்சல் தான் என்று புதிய எதிர் உரை தாக்கல் செய்தது.
                       விசாரித்த நீதிமன்றம் இப்படி அரசு தனது நிலைபாட்டை மாற்றிகொள்ளலாமா என்று கேட்கவில்லை.    அரசு நிலைப்பாட்டை ஒட்டி எப்போது சிலையை அகற்றப் போகிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்தது.
                      சிலையை அகற்றினால் கெட்ட பெயர் வரும் என சிந்தித்த  ஜெயலலிதா  சிவாஜிக்கு மனிமண்டபத்தை அரசே கட்டும் என அறிவித்தார்.
                       ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.    கருணாநிதி வைத்த சிலையை அகற்றியது போலவும் ஆயிற்று .     நடிகர் சங்கம்  கட்ட  தவறிய  மணிமண்டபத்தை ஜெயலலிதா கட்டியது போலவும் ஆயிற்று.         இப்போது சிலையை அகற்றி மணிமண்டபம் கட்டும் இடத்தில வைத்தால் யாரும் குற்றம்  சொல்ல முடியாதே?
                 உயர்நீதி மன்றத்தில் அவகாசம் கேட்டிருக்கிறது  அரசு. .   சிலையை அகற்றாமல் மணிமண்டபம் கட்டினால் அது பெருந்தன்மை.   சிலையை அகற்றுவதற்காக மணிமண்டபம் அறிவிப்பு என்றால் அது இழுக்கு.
               ஜெயலலிதா பெருமை தேடிக் கொள்ளப்போகிறாரா  அல்லது இழிவைத் தேடிகொள்ளப் போகிறாரா  ?  
                     

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.